SOURCE :- BBC NEWS

திருநங்கையுடன் திருமணம் – பாலியல் ஈர்ப்பில்லாமல் வாழும் தம்பதி சமூகத்தில் சந்திக்கும் சவால்கள்

21 நிமிடங்களுக்கு முன்னர்

ஆத்விகா சௌத்ரியும் ரவி குமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அத்விகா ஒரு திருநங்கை. இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரவிகுமாரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் அல்பாலீர்ப்பாளர்கள் (Asexual).

திருநர் சமூகத்தையே ஏற்றுக்கொள்ளாத இந்தச் சமூகம், எப்படி ஏசெக்சுவல் உறவை ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் இந்தத் தம்பதி.

பாலியல் ஈர்ப்பற்ற, அன்பின் துணையோடு வாழ விரும்பும் மக்கள் இவ்வாறு வரையறுக்கப்படுகின்றனர். திருநங்கையைத் திருமணம் செய்துகொண்டதால் ரவி குமாரும், இயல்பில் அல்பாலீர்ப்பாளர்களாக இருப்பதால் இந்தத் தம்பதியும் பல்வேறு சங்கடமான தருணங்களைச் வாழ்வில் சந்தித்து வருகின்றனர்.

பல்வேறு கட்டுப்பாடுகளைக் கடந்து இவர்கள் தங்களின் காதல் வாழ்வில் வெற்றி பெற்றது எப்படி? முழு விவரம் இந்த வீடியோவில்!

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : BBC