Home தேசிய national tamil பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலுக்கு உள்ளான குப்ராவா நிலை என்ன?

பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலுக்கு உள்ளான குப்ராவா நிலை என்ன?

5
0

SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

26 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதில் நடவடிக்கையாக பல்வேறு இடங்களை பாகிஸ்தான் ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் சோகிபல் கிராமம் பாதிப்படைந்துள்ளது.

இங்குள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மக்கள் பாதுகாப்பிற்கான வேறு இடங்களுக்கும் பதுங்கு குழியிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஸ்ரீநகரிலிருந்து 121 கி.மீ தொலைவில் குப்வாரா மாவட்டம் உள்ளது. இதன் எல்லையில் அமைந்துள்ள சோகிபல் கிராமம் அச்சத்தின் பிடியில் அமைதியுடன் காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் பல எல்லைப் பகுதிகளில் கடந்த ஏழாம் தேதி பாகிஸ்தானால் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டன. பாகிஸ்தானால் ஏவப்பட்ட பல ஷெல்கள் சோகிபலிலும் விழுந்துள்ளன. இந்த தாக்குதல் பல மணி நேரம் தொடர்ந்துள்ளது. பல வீடுகள் மற்றும் கடைகள் இந்தத் தாக்குதலால் சேதமடைந்துள்ளன.

ஏழாம் தேதி இரவு 2.10-க்கு இந்த பகுதியில் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கிறார் சௌகிபல் கிராமவாசியான அகமது அலி

மேலும் அவர், “அதன்பின் நாங்கள் தூங்கவில்லை. குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறினோம். எங்கெல்லாம் பாதுகாப்பான இடம் இருந்ததோ அங்குத் பதுங்கிக்கொண்டோம். தூங்கவோ, சாப்பிடவோ இல்லை. காலை நான்கு மணி வரை ஷெல் தாக்குதல் தொடர்ந்தது. எங்கள் வீடுகள் பலமானவை இல்லை. அவை பலவீனமானவை. ஷெல் தாக்குதல் நடந்த போது அவை குலுங்கின. குழந்தைகள் பயந்துவிட்டனர்” என்றார்.

ஷெல் தாக்குதல் தொடங்கியபோது அனைவரும் பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்ததாகக் கூறுகிறார் அதே கிராமத்தைச் சேர்ந்தவரான அல்தாஃப். அதனை விவரித்தவர், “இரவு 2.10-க்கு ஷெல் தாக்குதல் தொடங்கியவுடன் தஞ்சம் அடைய ஓடினோம். இங்கு யாரும் இல்லை, அனைவரும் சென்றுவிட்டனர்” என்றார்.

ஷெல் தாக்குதலில் இருந்து தனது குழந்தைகளுடன் எப்படி தற்காத்துக் கொண்டார் என்பதை அபிதா பேஹம் விளக்கினார்

“மிகவும் சிரமப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டோம். குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினோம். வேறு என்ன செய்ய முடியும்? அங்கு மருத்துவர்களோ அல்லது மருந்துகளோ இல்லை. என் குழந்தைகள் அழத் துவங்கிவிட்டனர். அவர்கள் அம்மா ஏதோ நடக்கிறது என கூறினர். அதனால், அவர்களை வெளியே தூக்கிச் சென்றேன்” என்றார் அபிதா பேஹம்.

அதே ஊரைச் சேர்ந்தவரான மொஹம்மது காஸிம் கான், தாங்கள் இங்குத் தங்கவோ இல்லை வேறு எங்காவது செல்லவோ முடியாது என்கிறார். தொடர்ந்து பேசியவர், “நாங்கள் மிகவும் அச்சமடைந்துள்ளோம். ஆனால், என்ன செய்ய முடியும்? வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கதவுகள் எல்லாம் உடைந்துள்ளன. இதை இப்படியே எங்களால் விட முடியாது. எங்களுக்கு என்ன ஆகும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்” என்

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU