SOURCE :- INDIAN EXPRESS

பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதலில் போகியன்று குல தெய்வத்திற்கு நன்றி சொல்கிறோம். இரண்டாவதாக பொங்கலன்று சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆதி காலத்தில் இருந்து தற்போது வரை சூரிய வழிபாடு இருந்து வருகிறது. அதற்கு அடுத்த நாள் உழவுக்கு பெரிதும் பயன்படும் மாடுகளுக்கு நன்றி தெரிவித்து வழிபடுகிறோம்.

Advertisment

சூரிய பொங்கலன்று அதிகாலையில் எழ வேண்டும். வீட்டை நன்றாக அலங்கரித்து வீட்டின் முற்றத்தில் பொங்கல் வைக்கும் வழக்கத்தை மக்கள் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக, பொங்கல் பானையை முற்றத்தின் கிழக்கு திசை நோக்கி சாய்த்து வைத்து பொங்கல் வைக்கப்படும். சூரிய பகவானுக்கு நன்றி கூறும் விதமாக இது மேற்கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு முற்றத்தில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் கிட்சனில் பொங்கல் வைத்தும் வழிபடலாம். அதன்பின்னர், பொங்கலை சாமிக்கு படையலாக வைத்து வழிபட வேண்டும். மேலும், வாழ்க்கையில் அனைத்து நிலையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தான், பொங்கல் சாம்பாரில் அனைத்து சுவை உடைய காய்கறிகளும் சேர்க்கப்படுகிறது. 

அதன்படி, இந்த ஆண்டுக்கான பொங்கல் வழிபாட்டிற்கான நேரம் 14-ஆம் தேதி காலை 9:03 மணிக்கு தொடங்கி மாலை 6:01 மணி வரை இருக்கிறது. அதேபோல், காலை 9:03 மணி முதல் காலை 10:55 மணிக்குள் பொங்கல் வைக்க வேண்டும்.

SOURCE : TAMIL INDIAN EXPRESS