SOURCE :- BBC NEWS
அசிங்கமான முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் ‘உலக கர்னிங் சாம்பியன்ஷிப்’ பற்றி தெரியுமா?
3 நிமிடங்களுக்கு முன்னர்
உலக கர்னிங் சாம்பியன்ஷிப் எனும் ஒரு அசாதாரணமான போட்டி, வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கும்ப்ரியாவின், வருடாந்திர கிராப் (Crab) கண்காட்சியில் நடைபெற்றது.
இந்த போட்டி நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. இதில் போட்டியாளர்களின் நோக்கம் ஒரு அசிங்கமான முகத் தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே.
டாமி மேட்டின்சன், 18 முறை உலக கர்னிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் மற்றும் கின்னஸ் சாதனை படைத்தவர்.
இதுகுறித்து பேசிய அவர், “என் அப்பா 10 முறை உலக கர்னிங் சாம்பியனாக இருந்தவர். எனவே, அந்த பாரம்பரியத்தை நான் பின்பற்றினேன். அவ்வளவு தான்” என்கிறார்.
முழு விவரம் காணொளியில்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC