Home Latest news tamil சமீபத்திய செய்தி ‘அமெரிக்காவின் வர்த்தக அழுத்தத்தால் இந்தியா – பாக்., சண்டை நிறுத்தம்’: டிரம்ப்

‘அமெரிக்காவின் வர்த்தக அழுத்தத்தால் இந்தியா – பாக்., சண்டை நிறுத்தம்’: டிரம்ப்

2
0

SOURCE :- BBC NEWS

இந்தியா பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது எப்படி

பட மூலாதாரம், Getty Images

12 மே 2025, 03:23 GMT

புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்

சண்டையை நிறுத்தவில்லை என்றால் உங்களுடன் அமெரிக்கா வர்த்தக உறவுகள் வைத்துக்கொள்ளது என இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் இன்று கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

”இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோசமான சண்டையை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து நிறுத்தியுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் சக்தி வாய்ந்தவர்கள், அதே நேரத்தில் இந்த சூழ்நிலையையும் நன்கு புரிந்துகொண்டுள்ளனர்” என்றார் டிரம்ப்,

”நாங்கள் அவர்களுக்கு உதவியுள்ளோம். நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்வோம். இதை நிறுத்துங்கள். நீங்கள் நிறுத்தினால் வர்த்தகம் செய்வோம், இல்லையென்றால் வர்த்தகம் செய்ய மாட்டோம் என கூறினோம். இந்தநிலையில் சண்டையை நிறுத்துகிறோம் என அவர்கள் கூறினார்கள். ”என்றார் டிரம்ப்

”நிறையக் காரணங்களுக்காகச் சண்டையை நிறுத்தினார்கள். ஆனால் வர்த்தகம் முக்கிய காரணம்”

மேலும், ”நாங்கள் இந்தியா பாகிஸ்தானுடன் நிறைய வர்த்தகத்தில் ஈடுபடப்போகிறோம். நாங்கள் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் பாகிஸ்தானுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளோம்.” என்றார் டிரம்ப்

”இதுவொரு மோசமான அணு ஆயுத போராக மாறியிருக்கக்கூடும். நாங்கள் அந்த அணு ஆயுத மோதலை நிறுத்தியிருக்கிறோம்.”

ஷார்ட் வீடியோ

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோதி பேசியது என்ன?

பஹல்காம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

”ஏப்ரல் 22ம் தேதியன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்களை அவர்களது குடும்பத்தின் முன், அவர்களுடைய குழந்தைகளின் கண் முன்னால் கொல்லப்பட்டனர். இது மிகவும் குரூரமான செயல். இது நமது நாட்டின் நம்பிக்கையை உடைப்பதற்கான செயல், இது என் மனதில் மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது.” என்றார் நரேந்திர மோதி.

இந்திய ராணுவத்திற்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுத்ததாக கூறிய மோதி, ” நமது நாட்டு பெண்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். மே 6 மற்றும் 7ம் தேதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நம்முடைய மன உறுதியை நாட்டு மக்கள் பார்த்தனர். பயங்கரவாத முகாம்கள் மீதும் பயங்கரவாதிகள் மீதும் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்தோம்.” என்றார்.

இந்திய ராணுவம் கூறியது என்ன?

பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட டிரோன்களைத் தடுப்பதில் இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு சுவர் போன்று செயல்பட்டதாக இந்திய ராணுவத்தின் சார்பாக இன்று (மே 12) பிற்பகல் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.

ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.

இதில் பேசிய ஏர்மார்ஷல் ஏ. கே பார்தி, ” இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு எதிரானது மட்டுமே, பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரானது அல்ல. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் இந்த நடவடிக்கையில் தலையிட்டது. எனவே அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு அவர்களே பொறுப்பு” என்றார்.

”ஆனால், பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்காக தலையிட முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது. அதுவே எங்களை பதிலடி கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளியது.” என்றார் ஏ. கே பார்தி.

இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பற்றி குறிப்பிட்ட ஏ. கே பார்தி, ”பாகிஸ்தானின் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வாகனங்களையும் வீழ்த்துவதில் வான் பாதுகாப்பு அமைப்புகள் முக்கிய பங்கு வகித்தன” என்றார்.

”பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட டிரோன்களைத் தடுப்பதில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு சுவர் போன்று செயல்பட்டது. பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் ஏவுகணை மற்றும் பிற ஆயுதங்கள் வீழ்த்தப்பட்டன ”

ஷார்ட் வீடியோ

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அணு ஆயுத அமைப்புகள் மீது தாக்குதலா?

“இந்தியாவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான்பாதுகாப்பு அமைப்பான ஆகாஷின் திறன் சோதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அரசின் பட்ஜெட் மற்றும் கொள்கை ஆதரவுகள் மூலமாகவே இது சாத்தியமானது” எனவும் பார்தி கூறினார்.

மேலும் இந்தியா மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தால் சீனத் தயாரிப்பான பிஎல்-15 ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக கூறிய ஏ.கே பார்தி, அந்த ஏவுகணையின் உடைந்த பாகங்கள் என கூறி புகைப்படங்களை காண்பித்தார்.

இந்தியா கிரானா ஹில்ஸ் பகுதியை தாக்கியதா என கேட்கப்பட்டபோது,” கிரானா ஹில்ஸ் பகுதியில் சில அணு ஆயுத அமைப்புகள் இருப்பதாக கூறியதற்கு நன்றி. அது பற்றி எங்களுக்கு தெரியாது. அங்கு என்ன இருந்தாலும் சரி, நாங்கள் அந்த பகுதியை தாக்கவில்லை” என்றார் ஏ. கே பார்தி.

 இந்திய பாதுகாப்புப் படைகளின் விளக்கம்

‘விமானத் தளங்களை குறிவைப்பது கடினம்’

இந்த சந்திப்பின் போது பேசிய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், “இந்தியாவின் விமானப்படைத் தளங்களை குறிவைப்பது மிகக் கடினம். 1970களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை அடித்து நொறுக்கினார்கள். அப்போது ஆஸ்திரேலியா “சாம்பலோடு சாம்பல், தூசியோடு தூசி” என்று கூறியது.

அதே போன்று இந்தியாவின் வான் பாதுகாப்பு அடுக்குகளை நீங்கள் பார்த்தால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும். இந்திய பாதுகாப்பு தளங்களை நெருங்க முயன்றால், இந்த அடுக்குகளில் ஒன்று கண்டிப்பாக தாக்கும்” என்றார்.

ஷார்ட் வீடியோ

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

‘பாகிஸ்தான் வான் படை தடுப்பு’

வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் பேசும்போது, இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து, அச்சுறுத்தல்களை தடுத்தது என்றார்.

”ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்திய கடற்படையின் கை ஓங்கியிருந்தது. கடற்படை போர் கப்பல்களின் நிலை நிறுத்தம் எதிரி அருகில் வருவதை தடுத்தது. இந்தியவின் கப்பல்கள், பாகிஸ்தான் வான் படை சுதந்திரமாக செயல்படுவதை தடுத்தது. அத்துடன் கடல் வழி அச்சுறுத்தல்களையும் குறைத்தது” என்றார் ஏ.என்.பிரமோத்

பாகிஸ்தான் கூறியது என்ன?

பாகிஸ்தான் தனது போர் விமானங்களில் ஒன்று சேதமடைந்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீப நாட்களாக நிலவும் பதற்றமான சூழலில், பாகிஸ்தான் இவ்வாறு தெரிவிப்பது இதுவே முதன் முறையாகும்.

பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அதில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது தங்களது போர் விமானங்களில் ஒன்று சிறிய சேதத்தை சந்தித்ததாக தெரிவித்தார்.

இருப்பினும், அந்த போர் விமானம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் கூடுதல் தகவல்கள் எதையும் வழங்கவில்லை.

சனிக்கிழமை இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தரை, வான் மற்றும் கடல் வழியிலான துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த முடிவு செய்தன.

ஒரே ஒரு பாகிஸ்தான் விமானம் மட்டுமே சிறிதளவு சேதமடைந்ததாக கூறிய பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், அதைத் தவிர வேறு எந்த தகவலையும் வழங்கவில்லை.

ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி யாரும் இல்லை என்றும், இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ‘போலி சமூக ஊடக தகவல்களை’ அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், PTV

ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா?

முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, இந்திய ராணுவத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.

அப்போது, இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், ANI

இதற்கு பதிலளித்த ஏ.கே.பார்தி ,”நாம் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். இழப்புகள் என்பது போர்ச்சூழலில் பொதுவானது. இந்த சூழலில் நாம் நமது நோக்கங்களை அடைந்தோமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், அதற்கான பதில் ‘ஆம்’ பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கத்தை நிறைவேற்றினோமா என்று கேட்டால் மீண்டும் இதற்கு வலிமையான பதில் ‘ஆம்’.” என்றார்

மேலும் அவர், ”இதன் முடிவுகளை உலகமே பார்க்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் மேலும் விரிவாக என்ன நடந்தது? எத்தனை எண்ணிக்கை? எந்த தளத்தில்? நாம் இழந்தோமா? போன்றவை குறித்து இந்த நேரத்தில் பதிலளிக்க நான் விரும்பவில்லை. நாம் இன்னமும் போர்ச்சூழலில் தான் இருக்கிறோம். இப்போது நான் கருத்து தெரிவித்தால், அது நன்மை பயப்பதாக இருக்காது. எனவே எதிரிகளுக்கு இந்த நிலையில் எந்த சாதகமான நிலையையும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை” என்றார்

”என்னால் சொல்ல முடிவது இதுதான்,’நாம் நமது நோக்கங்களை அடைந்து விட்டோம்’. மேலும் ‘நம்முடைய அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக திரும்பினர்” என்று கூறினார் ஏ.கே.பார்தி.

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், ANI

‘கராச்சியை எந்நேரமும் தாக்க தயாராக இருந்தோம்’ – இந்திய கடற்படை

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கடற்படை வைஸ் அட்மிரல் பிரமோத்,” இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து கடலில், இந்திய கடற்படையின் அபாரமான செயல்பாட்டுத்திறன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கு காரணமாக அமைந்தது” என்றார்.

ஏப்ரல் 22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இந்திய கடற்படை விரைவான மற்றும் அளவுக்குட்பட்ட கடல்சார் பதில் நடவடிக்கைகளை எடுத்ததாக கூறிய பிரமோத்,” அரபிக் கடல் பகுதியில் ஆயுதங்கள் ஏவி, தயார் நிலை உறுதிப்படுத்தப்பட்டது” என கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான்

“தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளில் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு துல்லியமாக தாக்க தளவாடங்கள் மற்றும் கள தயார்நிலையை மறு மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும்,” என்று பிரமோத் தெரிவித்தார்.

கராச்சி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் தாக்கும் விதமாக கடற்படை முழுமையான தயார் நிலையில் இருந்தது எனக் கூறும் பிரமோத், “இந்திய கடற்படையின் முன்னிலைச் செயல்பாடு, பாகிஸ்தானின் கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது. இதனை தாங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்தோம்” என்றார்

தற்போதும் இந்திய கடற்படையின் செயல்பாடுகள் அதே நிலையில் இருப்பதாக அட்மிரல் பிரமோத் கூறினார்.

– இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC