SOURCE :- INDIAN EXPRESS

இந்திய இளம் செஸ் வீரர் குகேஷ் தொம்மராஜுவுக்கு 2024 ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்து போனது. அவர் ஏப்ரலில் நடந்த கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்று இளம் செஸ் வீரர் ஆனார். இதை விட சிறப்பான தரமான சம்பவமாக, சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி, சாம்பியம் பட்டத்தை வகை சூடினார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியம் பட்டம் பெற்ற முதல் இளம் வீரர் என்கிற பெருமையையும் பெற்றார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Gukesh earned $1.5 million in 2024 — over two-times more than US president’s annual salary — in prize money alone, report says

இந்நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், 2024 ஆம் ஆண்டில் மட்டும் சம்பாதித்த பரிசுத் தொகை, அமெரிக்க அதிபரின் ஆண்டு வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறப்பட்டுள்ளது. செஸ்.காம் இணையப் பக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 18 வயதான குகேஷ் 2024-ல் பரிசு வென்றதன் மூலம் மட்டும் 15,77,842 அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துள்ளார். இது இந்திய மதிப்பின்படி ரூ. 13.6 கோடி ஆகும். 

இதில்,  உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றதற்காக  தமிழக அரசு குகேஷுக்கு வழங்கிய ரூ.5 கோடி, கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, அவரது பள்ளி வேலாம்மாள் வித்யாலயா பரிசளித்த மெர்சிடிஸ் பென்ஸ் இ -கிளாஸ் சொகுசு கார் இவை எதுவும் அடங்காது.

Advertisment

Advertisement

2024ல் குகேஷ் உட்பட 17 வீரர்கள் 1,00,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் பரிசாக வென்றுள்ளனர் என்றும் செஸ்.காம் இணையப் பக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஹம்பி கோனேரு உட்பட இரண்டு பெண்கள் மட்டுமே உள்ளனர். பிரக்ஞானந்தா 2,02,136 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையுடன் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். அர்ஜுன் எரிகைசி 1,19,767 அமெரிக்க டாலர்களுடன் 15-வது இடத்தில் இருக்கிறார். 

இந்தப் பட்டியலில் மேக்னஸ் கார்ல்சென் 4-வது இடத்தையும், டிங் லிரன் இரண்டாவதாகவும் உள்ளனர். “2024 இல் இரண்டு வீரர்கள் ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் வென்றனர், ஆறு பேர் 4,00,000 அமெரிக்க டாலர்கள் வென்று, அமெரிக்க அதிபரை விட அதிகமாக சம்பாதித்துள்ளனர். மற்றும் 17 பேர் இதேபோல் நான்கு இலக்கங்களில் பரிசுத்தொகையை வென்றுள்ளனர்.” என்று செஸ்.காம் இணையப் பக்கம் தெரிவித்துள்ளது.  

அமெரிக்க அதிபருக்கு ஆண்டுக்கு 4,00,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது. கூடுதலாக 50,000 டாலர்கள் செலவினங்களுக்காகவும், 1,00,000 டாலர்கள் பயணக் கணக்கு மற்றும் 19,000 பொழுதுபோக்கு பட்ஜெட் செலவுக்காகவும் வழங்குப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

SOURCE : TAMIL INDIAN EXPRESS