SOURCE :- BBC NEWS

அமெரிக்க சிறையிலிருந்து திபு திபுவென தப்பியோடும் கைதிகள்

அமெரிக்காவில் நியூ ஓலியன்ஸில் ஒரு சிறையில் இருந்து பத்து கைதிகள் தப்பி ஓடிய காட்சி வெளியாகி உள்ளது. தப்பியோடியவர்கள் சிறை ஊழியர்களின் உதவியை பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதில், பல கைதிகள் கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். வியாழக்கிழமை நள்ளிரவு இவர்கள் தப்பி ஓடியதாக கருதப்படும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை நடந்த கணக்கெடுப்பின் போது இவர்கள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேரில் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

SOURCE : THE HINDU