SOURCE :- INDIAN EXPRESS

அரிசியே இல்லாமல், பாசிப்பருப்பில் இட்லி சமைப்பது எப்படி என்பதை பார்ப்போம். இந்த இட்லி உடல் எடையை குறைக்க வழி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – ஒரு டம்பளர்

உளுத்தம் பருப்புணு – ஒரு டம்பளர்

Advertisment

Advertisement

வரமிளகாய் – 6

உப்பு தேவையான அளவு

இஞ்சி – ஒரு துண்டு

கொத்தமல்லி இலை சிறிதளவு

கடுகு ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கடலை எண்ணெய் – சிறிதளவு

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி வரமிளகாய் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு, இந்த கலவையை மிக்ஸியில் வைத்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அதன்பிறகு அதில், தேவையான அளவு எப்பு, துருவிய இஞ்சி, கொத்தமல்லி இலை, கடலை எண்ணையில் தாளித்த கடுகு சீரகம் தாளிப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு, 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு இட்லி பானையை அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்தவுடன், இட்லி தட்டில் மாவை ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான பஞ்சு போன்ற இட்லி தயார்.

தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், சிறிதளவு இஞ்சி, ஒரு பூண்டு ஆகியவற்றை சேர்த்து சட்னி அரைத்து இந்த இட்லியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்களேன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS