SOURCE :- INDIAN EXPRESS
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரும், மாவட்ட அமைச்சூர் கபடி கழகத்தின் தலைவருமானவர் ஜகபர் அலி. இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் காரைக்குடியில் வசித்து வரும் நிலையில், ஜகபர் அலி மட்டும் காட்டுபாவா பள்ளிவாசல் அருகே தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், ஜகபர் அலி, கடந்த 17 ஆம் தேதி அவர் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த 407 லாரி அவர் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜகபர் அலி இறந்து விட்டதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.
இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமயம் காவல்துறையினர் ஜகபர் அலி உடலை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஜகபர் அலி உயிரிழந்ததை அறிந்த 50-க்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும், ஜகபர் அலி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
திருமயம் சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோதமாக அதிக கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகள் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்து தொடர்ந்து கனிமவள கொள்ளையை தடுக்க போராடி வந்தவர் ஜகபர் அலி என்றும், அதனால்தான் அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் எனவும் கூறினர். இதில் காவல்துறையினர் தலையிட்டு உரிய முறையில் விசாரணை நடத்தி தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதுவரை ஜகபர் அலியின் சடலத்தை பெற மாட்டோம் என்று உறவினர்கள் உறுதியாக தெரிவித்ததால் மருத்துவமனை வளாகமே பரபரப்பாக இருந்தது. மேலும், இது குறித்து திருமயம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ், மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், அவரது ஓட்டுநர் காசி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குவாரி உரிமையாளர் ராமையாவை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனை கொலை வழக்காக மாற்றி உள்ள காவல்துறையினர், கூடுதலாக ஒருவரை சேர்த்து மொத்தம் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.ஜெபகர் அலி அவர்கள் ,
சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த விடியா அரசு.
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து,
மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.
திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான திரு. ஜெகபர் அலி அவர்கள், கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், மோடி கபடி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற, முக்கிய பங்காற்றியவர் திரு. ஜெகபர் அலி அவர்கள். இயற்கை வளப்பாதுகாப்பு, கனிமவளங்களின் கொள்ளையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அக்கறையுடன் செயல்பட்டவர்.
கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் பலி கொடுத்திருக்கிறார்கள்.
இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்குமளவுக்கு, தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனக் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த திமுக கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன?
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.
அதிமுக – பாஜக கள்ளக்கூட்டணியை நொடிக்கொரு முறை இந்த நாட்டுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் ஜகபர் அலி மரணம் தொடர்பாக அண்ணாமலையும், பழனிசாமியும் ஒரே பதிவை வெளியிட்டுள்ளார்கள். அண்ணாமலை போட்ட பதிவை அப்படியே வழிமொழிந்து பசையே இல்லாமல் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார். பத்துவரி பதிவைக் கூட சொந்தமாக எழுத எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை. பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு எழுதித் தந்த பதிவை எடுத்து பதிவிடும் அளவுக்கு பாஜகவின் அடிமையாக மாறிவிட்டார். 2 கட்சிகள் ஒரே மாதிரியான அறிக்கை விடும் வழக்கத்தை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகம் செய்துள்ளார் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS