SOURCE :- INDIAN EXPRESS

சின்னத்திரை டி.ஆர்.பி ரேட்டிங்கில், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் சீரியல்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக பார்க்கப்பட்ட சீரியல்களின் டி.ஆர்.பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், இந்த வாரம் டாப் 10 இடங்களைப் பிடித்த சீரியல்களைப் பார்ப்போம்.

Advertisment

1 சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் 10.60 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2 மூன்று முடிச்சு சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 10.25 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.

3 கயல் சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரமும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வாரம் 9.91 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

Advertisment

Advertisement

4 மருமகள் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் இந்த வாரம் 8.96 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது.

5 அன்னம் சீரியல்:  சன்டிவியில் புதிதாக தொடங்கிய அன்னம் சீரியல்,  8.75புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

6 சிறகடிக்க ஆசை சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 8.56  புள்ளிகளைப் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

7 ராமாயணம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் சீரியல் 8.45  புள்ளிகள் பெற்று 7-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

8 எதிர்நீச்சல் தொடர்கிறது: கடந்த முறை டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த எதிர்நீச்சல் சீரியல் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியதில் இருந்து டாப் 5 இடத்தை பிடிக்க போராடி வருகிறது. இந்த வாரம் 7.69 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பெற்றுள்ளது.

9 பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6.90 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

10 பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த முறை 6.81 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS