SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவை வெளிப்படையாக ஆதரிக்காமல் மத்தியஸ்தம் குறித்து ரஷ்யா பேசியது ஏன்?

48 நிமிடங்களுக்கு முன்னர்

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு எதிரான தீர்மானங்களில் ஆறு முறை ரஷ்யா வீட்டோ அதிகாரத்தின் மூலம் இந்தியாவை ஆதரித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை காஷ்மீர் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அண்மையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா வெளிப்படையாக ஆதரவளிக்கவில்லை. ரஷ்யாவின் எதிர்வினை நடுநிலையானதாக இருக்கிறது.

இரு நாடுகளும் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று ரஷ்யா வேண்டுகோள் விடுத்ததுடன் மத்தியஸ்தம் செய்யவும் முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் எப்போதும் ரஷ்யாவுக்கு வேண்டாத நாடாக இருந்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. 1965 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போரில், ரஷ்யா நடுநிலை வகித்து மத்தியஸ்தம் செய்தது.

இந்தியாவுக்கு இந்த முறை ரஷ்யா ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை? காணொளியில் விளக்கமாகத் தெரிந்துக் கொள்வோம்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU