SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

‘இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை நான் செய்ததாக கூற விரும்பவில்லை’ – டிரம்ப்

10 நிமிடங்களுக்கு முன்னர்

கத்தாரின் தோஹாவில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை தான் செய்ததாக கூற விரும்பவில்லை என தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நான் (இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தைச் செய்ததாகக் கூற விரும்பவில்லை. ஆனால், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பிரச்னையை தீர்க்க கடந்த வாரம் உதவினேன். அது அதி தீவிரமடைந்து வந்தது.

திடீரென வெவ்வேறு வகையான ஏவுகணைகளைப் பார்க்க நேர்ந்தது, அதற்குத் தீர்வு காண வேண்டியிருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பின் நான் இதில் ஈடுபட வேண்டியிருக்காது என கருதுகிறேன். இதற்குத் தீர்வு காணப்பட்டதாக நினைக்கிறேன்.

அவர்களிடம் வர்த்தகம் பற்றிப் பேசினோம். சண்டைக்குப் பதில் வர்த்தகம் செய்யலாம் என்றேன். பாகிஸ்தான் அதற்கு மகிழ்ச்சியடைந்தது. இந்தியா அதற்கு மகிழ்ச்சியடைந்தது.

அவர்கள் அதற்கான பாதையில் இருப்பதாக நினைக்கிறேன். அவர்கள் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாகச் சண்டையிட்டு வருகின்றனர். ஆனால் நாங்கள் அதைச் செய்தோம். அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.” என்றார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC