SOURCE :- BBC NEWS

இந்தியா, பாகிஸ்தான் மோதல்: நள்ளிரவில் நடந்த டிரோன் தாக்குதல் – நேற்று முதல் நடந்தது என்ன?

34 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவின் மூன்று ராணுவ இலக்குகளைக் குறிவைத்து வியாழக்கிழமை இரவு ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் பாகிஸ்தான் தாக்கியதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர், ஜம்மு மற்றும் பஞ்சாபில் உள்ள பதான்கோட்டில் செயல்பட்டு வரும் ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் இத்தகைய தாக்குதல்களை நடத்தியதாகவும், இதை இந்தியா முறியடித்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இல்லையென பிபிசியிடம் கூறினார்.

பிபிசியிடம் பேசிய அவர், “இதை மறுக்கிறோம், இதுவரை நாங்கள் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. தாக்குதல் நடத்திவிட்டுப் பிறகு நாங்கள் மறுக்கமாட்டோம்” எனவும் அவர் கூறினார்.

இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் இந்த தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றது? எல்லையோரப் பகுதிகளில் இந்தியா மேற்கொண்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU