SOURCE :- BBC NEWS

இந்தியா, பாகிஸ்தான், டிரோன், ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“நம்பகமான தகவலின்படி, பாகிஸ்தானின் லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

மேலும், பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் பல ராணுவ தளங்களை குறிவைக்க முயன்றதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியது.

மறுபுறம், பாகிஸ்தானும் இந்தியா மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது.

பாகிஸ்தானின் இந்த கருத்துக்கு இந்தியா பதிலளிக்கவில்லை

இரு நாடுகளும் கூறிய எந்தவொரு கூற்றையும் பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.

இந்தியா, பாகிஸ்தான், டிரோன், ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இந்த டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், டிரோன், ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியா, பாகிஸ்தான், டிரோன், ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில், “மே 7 இரவு முதல் இந்தியா டிரோன்களின் உதவியுடன் பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயற்சித்து வருகிறது” என்று கூறினார்.

ராணுவ நடவடிக்கை தொடர்கிறது என்றும், பாகிஸ்தானின் லாகூர், குஜ்ரன்வாலா, சக்வால், அட்டாக், ராவல்பிண்டி, மியான்வாலி மற்றும் கராச்சி ஆகிய இடங்களில் இந்தியாவின் டிரோன்கள் அழிக்கப்பட்டதாகவும் சௌத்ரி கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான், டிரோன், ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையே அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தராலி மற்றும் பூஜ் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல ராணுவ நிலைகளை டிரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் டிரோன்களின் சிதைவுகள் இப்போது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருவதாகவும், இது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது என்பதை நிரூபிக்கிறது என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்தியாவும் அதே தீவிரத்துடன் பதிலளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், டிரோன், ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியா, பாகிஸ்தான், டிரோன், ஜம்மு காஷ்மீர், தெற்காசியா

பட மூலாதாரம், Getty Images

வியாழக்கிழமை காலை பாகிஸ்தானில் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை தனது ஆயுதப் படைகள் குறிவைத்ததாக இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ராஜௌரி ஆகிய பகுதிகளில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில், பாகிஸ்தான் தன்னிச்சையாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 16 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU