SOURCE :- BBC NEWS

இந்திய தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானில் நிலை என்ன?
20 நிமிடங்களுக்கு முன்னர்
பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அகமது ஷெரிஃப் செளத்ரி, செய்தியாளர்களை சந்தித்து இரவில் நடத்தப்பட்ட இந்தியத் தாக்குதல்களைப் பற்றி பேசினார் என பிபிசி உருது செய்தியாளர் ஃப்ர்ஹத் ஜாவேத் கூறினார்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷெரிஃப் செளத்ரி, பாகிஸ்தானின் பஞ்சாப், முரித்கே (Muridke), சியால்கோட் (Sialkot),ஷகர்கர் (shakargarh) பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கூறினார்.
அதேபோல், பாகிஸ்தானின் முசாபராபாத் (Muzaffarabad) மற்றும் கோட்லியிலும் (Kotli) தாக்குதல் நடைபெற்றுள்ளது என்றார் அவர்.
இந்தப் பகுதிகள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளது என்றும், அங்கு மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகமது ஷெரிஃப் செளத்ரி தெரிவித்துள்ளார்.
காயமடைந்த 35 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், தாக்குதல் நடத்திய இந்தியாவுக்கு உரிய பதிலடி தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC