SOURCE :- INDIAN EXPRESS

இன்றைய காலக்கட்டத்தில், பலரும் அதிகமான உடல் எடை பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் பெண்கள், நடுத்தர வயதினர் என பலரும் இந்த பிரச்னையை சந்தித்து வருகின்றனர். உடல் உழைப்பு இல்லாதது, எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது உள்ளிட்ட பிரச்னைகளால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் எடை கூடும். தொப்பை விழும்.

Advertisment

குறிப்பாக பெண்களுக்கு பிரசவம் முடிந்தவுடன் ஏற்படும் உடல்நிலை மாற்றத்தின் காரணமாக உடல் எடை அதிகரிக்கும் நிலை உருவாகும். இந்த மாதிரி உடல் உடை அதிகரிப்பு, கொழுப்பு அதிகரிப்பு காரணமாக உடலில் பாதிப்பு ஏற்படுவதால், இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்வார்கள். ஆனால் இந்த கொழுப்புகளை குறைப்பதற்கு, எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மருத்துவம் செய்யலாம்.

வீட்டில் உள்ள சமையல் பொருட்களை வைத்து தினமும் ஒரு சூப் எடுத்துக்கொண்டாலே போதும் உடல் எடை வெகுவாக குறையும் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இந்த சூப்களை எடுத்துக்கொள்ளும்போது உடலில் உள்ள கொழுப்புகள் குறையும். உடல் எடையும் குறையும். அந்த வகையில், உடல் எடையை குறைக்க, கெட்ட கொழுப்புகளில் இருந்து விடுபட, கொள்ளு சூப் பெரிய உதவியாக இருக்கும். உடல் எடை மட்டுமல்லாமல், ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் கொள்ளு சூப் உதவும்.

கொள்ளு சூப்

Advertisment

Advertisement

முந்தைய நாள் இரவில் கொள்ளு ஊற வைத்து மறுநாள் அதை வேகவைக்க வேண்டும். வேக வைக்கும்போது அதில், லவங்கப்பட்டை, சோம்பு(ஒரு ஸ்பூன்), சின்ன வெங்காயம் (4-5) பூண்டு (4-5), இவை அனைத்தையும் சேர்த்து கொள்ளு வேக வைக்க வேண்டும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றிலும் குடிக்கலாம். அல்லது காலை உணவை முடித்துக்கொண்டு. 11 மணி நேரத்திலும் எடுத்துக்கொள்ளலாம். இந்த சூப், ரத்த அடர்த்தியை குறைத்து, ரத்த குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி, உடல் எடை மற்றும் தொப்பையையும் குறைக்கும்.

முருக்கை கீரை சூப்

முருங்கை கீரையில் உள்ள நிறைய கனிமசத்துக்கள், உடல்ல ஏற்படும் பல பாதிப்புகளை தீர்க்கிறது. நன்றாக தண்ணீரை கொதிக்க வைத்து, 2 கைப்பிடி முருங்கைகீரையை அதில் போட்டு, 20 நிமிடங்கள் மூடி வையுங்கள். அதன்பிறகு, எடுத்து பார்த்தால் கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் இறங்கியிருக்கும். அந்த தண்ணீரை குடித்துவிட்டு, அந்த இலைகளையும் சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் தேவையற்ற சதைகளை குறைக்கலாம்.

தக்காளி சூப்

கொதிக்கும் தண்ணீரில் தக்காளியை போட்டு எடுத்தால் அதன் தோல் உரிந்து வந்துவிடும். அதன்பிறகு நன்றாக தக்காளியை கசக்கி, ஒரு வடிகட்டி வைத்து தக்காளி விதைகளை எடுத்துவிட்டு, அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து சாப்பிடலாம். இந்த சூப் பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கும் நன்மை அளிப்பதாக இருக்கும்.

வாழைத்தண்டு சூப்

வாழைத்தண்டை நன்றாக வேகவைத்து உப்பு, மற்றும் மிளகு தூள் சேர்த்து சாப்பிடலாம். வாழைத்தண்டில் இருக்கும் அதிகமான நார்ச்சத்து, உடல் எடையை குறைக்க உறுதுணையாக இருக்கும்.

வெள்ளரிக்காய் சுரைக்காய் சூப்

வெள்ளரிக்காய் மற்றும் சுரைக்காய் கட் செய்து, ஆவியில் வேகவைத்து, நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து உப்பு மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம். இந்த சூப் இன்சுலீன் ரெசிஸ்டன்ட் குறையவும், ஃபைபர் அதிகரிக்கும் வழி செய்யும். உடலில் உளள கொழுப்புகளும் குறையும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS