SOURCE :- INDIAN EXPRESS

இரவில் தூங்கப் போகும் முன்பு கருஞ்சீரகப் பொடியை கொஞ்சூண்டு அதாவது ஒரு சிட்டிகை சாப்பிட்டுவந்தால் கேன்சர் உள்ளிட்ட எல்லா நோய்களுக்கும் மா மருந்து என்று மருத்துவ ஆஷா லெனின் கூறுகிறார்.

Advertisment

வாழ்க்கைமுறை மாறிவரும் உணவு முறை, உணவு உற்பத்தி முறை, நம்முடைய சுற்றுச்சூழல் ஆகியவை மனிதர்கள் பல நோய்களுக்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய்களைத் தவிர்க்க பலரும் இயற்கை மருத்துவம் பாரம்பரிய உணவு முறைகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சமூக ஊடகங்களின் காலத்தில், மருத்துவர்கள் இயற்கை மருந்துகளையும் பாரம்பரிய உணவுகளில் உள்ள மருத்துவக் குணங்களையும் கூறி வருகின்றனர்.

மருத்துவர் ஆஷா லெனின் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்,  “மரணத்தைத் தவிர எல்லா நோய்களுக்கும் அருமருந்து கருஞ்சீரகம்” என்று குரானில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்து என்று ஆஷா லெனின் கூறுகிறார்.

உங்கள் வீடுகளில், கருஞ்சீரகம் 100 கிராம், வெந்தயம் 100 கிராம், ஓமம் 50 கிராம் எடுத்து பொடி செய்து எனது படுக்கை அறையில் வைத்திருக்கிறேன். இந்த பொடியை ஒரு சிட்டிகை ஒரு சின்ன நெல்லிக்காய் விதை அளவு தினமும் தூங்கப் போகும்போது சாப்பிடுகிறேன். அனைவரும் சாப்பிடலாம், இந்த கருஞ்சீரகம் தைராய்டு, பிட்யூட்டரி, மேமரி எல்லா சுரப்பிகளையும் சரி செய்கிறது. மார்பக புற்றுநோய் வராது. இந்த கருஞ்சீரகம் எல்லா வகையான கேன்சர்களையும் வராமல் தடுக்கும். அதனால், இந்த கருஞ்சீரகப் பொடியை தினமும் தூங்கப் போகும் முன் கருஞ்சீரகப் பொடி ஒரு சிட்டிகை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு தூங்கலாம். இப்படி சாப்பிட்டால், கேன்சர் மட்டுமல்ல மாரடைப்பு வராமலும் தடுக்கும் என்கிறார் ஆஷா லெனின். அதே நேரத்தில், மாதவிடாய் காலத்தில் கருஞ்சீரகம் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.

Advertisment

Advertisement

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

SOURCE : TAMIL INDIAN EXPRESS