SOURCE :- INDIAN EXPRESS
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுவையான மெதுவடை எப்படி செய்வது என தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருட்டு உளுத்தம் பருப்பு,
உப்பு,
மிளகு,
பெரிய வெங்காயம்,
பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி,
இஞ்சி
செய்முறை:
கால் லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் உருட்டு உளுத்தம் பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை இரண்டு முறை கழுவி எடுத்து, 2 கப் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு மேல் பருப்பை ஊற வைக்க வேண்டாம். அப்படி ஊற வைத்தால் வடை அதிகமாக எண்ணெய் குடிக்கும்.
உருட்டு உளுத்தம் பருப்பு நன்றாக ஊறியதும், தண்ணீரை தனியாக வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனை பெரிய மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். இதன் பின்னர், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவு பக்குவத்திற்கு அரைக்க வேண்டும். அதன்படி ஒரு கப் அளவு உளுந்துக்கு, கால் கப் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இப்போது மாவை வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் மிளகு, பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம், சிறிய துண்டுகளாக வெட்டிய பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு டீஸ்பூன் இஞ்சி துருவல் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் தயாரித்து வைத்த மாவை அதில் போட்டு எடுக்கலாம். இந்த பக்குவத்தில் மாவு தயாரித்தால் வடை சுவையாக இருக்கும்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS