SOURCE :- INDIAN EXPRESS
பன் என்றாலே சாப்பிட சிலர் விரும்ப மாட்டார்கள். சிலர் கடைகளில் வாங்கும் பன் சாப்பிட விரும்ப மாட்டார்கள். ஆனால் வீட்டிலேயே அதே பன் செய்து கொடுத்தால் அதுவும் சுவையாகவும் சாஃப்ட் ஆகவும் வேண்டாம் என்றா சொல்வார்கள். அப்படி சுவையாகவும் சாஃப்ட் ஆகவும் ஈஸ்ட் இல்லாமல் உடனடியாக 20 நிமிடத்தில் பன் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
புளிச்ச தயிர்
பால்
எண்ணெய்
மைதா
பேக்கிங் பவுடர்
ஆப்பசோடா
நெய்
சர்க்கரை
செய்முறை
ஒரு பவுலில் புளிச்ச தயிர் சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்து அனைத்தையும் விஸ்க் வைத்து கலந்து விடவும். இவை நன்கு கரைந்ததும் அதில் பேக்கிங் பவுடர், ஆப்பசோடா சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதனுடன் மைதா மாவு,சர்க்கரை சேர்த்து கைவைத்து லூசான பதத்துக்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். பால் சிறிது சேர்த்து சாப்டாக்க கைகளில் ஒட்டாத அளவுக்கு பிசைந்து கொள்ளவும்.
இதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றினால் வாசனையாக இருக்கும். பின்னர் இந்த மாவை செய்வதற்கு ஏற்ப இட்லி தட்டில் பன் வடிவில் வெட்டி மேலே பால் தடவி விட்டு ஒரு கடாயில் வைத்து பத்து நிமிடம் வேகவிட்டு எடுத்தாலே போதும் வெந்துவிடும்.
இனிமே பஞ்சு போல பேக்கரி பன் 20 நிமிடம்|Instant உடனடி bun|பன் செய்வது எப்படி|Homemade buns in 20 min
இதை வேக வைக்கும் போது தண்ணீரோ, உப்பு எதுவும் சேர்க்கக்கூடாது வெறும் சட்டியில் வைத்து ரோஸ்ட் செய்த மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேல் சிறிது நெய் சேர்க்கலாம்.வாசனையாக இருக்கும். இன்னும் சாஃப்டாக இருக்க மேலே துணி வைத்து ஒரு பத்து நிமிடம் மூடி வைத்து விடவும். அந்த சூட்டிலேயே அது சாப்டா மாறிவிடும்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS