SOURCE :- INDIAN EXPRESS
பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி மயூவிடம் அப்பா பற்றி பேசியதும், கோபியின் செயலால் ராதிகா ஏமாற்றத்தை சந்தித்த்தும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் தொடக்கத்தில், ஈஸ்வரி, செழியன், இனியா ஆகிய மூவரும், கோபியை மீண்டும் பாக்யாவுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். கோபிக்கு பாக்யாவுடன் பேசும்போது தனி சந்தோஷம் கிடைக்கிறது. கோபியோடு சேர்ந்தால் பாக்யாவும் சந்தோஷமாக இருப்பாள். அதனால் சீக்கிரம் ராதிகாவை இந்த வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கின்னர்.
இதை கேட்ட செழியன், அது எப்படி முடியும் என்று கேட்க, உன் வாழ்க்கையில் என்ன நடந்தது, மாலினி இடையில் வந்தால் தானே, அதன்பிறகு நீ ஜெனி காலில் விழுந்து இப்போது சந்தோஷமாப வாழவில்லையா என்று கேட்கிறாள். இதன் பிறகு இனியாவும் கோபியும் பேசிக்கொண்டிருக்கும்போது, மயூ தான் பள்ளி கம்படிஷனில் வெற்றி பெற்றதாக சொல்கிறாள். இதை கேட்ட மகிழ்ச்சியில் உனக்கு என்ன வேண்டும் என்று கோபி கேட்கிறாள்.
இதற்கு மயூ, சின்ன சின்ன பொருட்கள் போட்டு வைக்க ஒரு பவுச் வேண்டும் என்று சொல்கிறாள். இதை கேட்ட கோபி நீ பெருசா கேளு என்று சொன்னாலும், மயூ இது போதும் என்று சொல்கிறாள். அதன்பிறகு நான் போய் ரெடியாகிவிட்டு வருகிறேன் ஷாப்பிங் போகலாம் என்று சொல்கிறான். கோபி போனபிறகு, மயூவிடம் வரும் ஈஸ்வரி, உங்க அம்மாவாலதான் அவனுக்கு உடம்பு சரியில்லை. இப்போ நீ வேற சும்மா இருக்கமாட்டியா என்று கேட்கிறாள்.
உன்னை வெளியில் கூட்டிக்கிட்டு போகனுமா? நீ என்ன வார்த்தைக்கு வார்த்தை அப்பா அப்பானு கூப்பிடுற என்று திட்ட, இதை கேட்ட பாக்யா, நீங்க என்ன இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க என்று கேடக, ஈஸ்வரி எதுவும் கேட்காமல் திட்டுகிறாள். எழில், செழியன், இனியாவுக்கு மட்டும் தான் கோபி அப்பா, உனக்கு அப்பா கிடையாது. நீ யாரோ குடிகாரன் பெத்த மகள் என்று சொல்ல மயூ அழுகிறாள். அந்த நேரத்தில் ராதிகா அங்கு வந்துவிடுகிறாள். அதை வாங்கிக்கொடு இதை வாங்கிக்கொடு என்று ஒரே தொல்லை என்று பேச்சை மாற்றுகிறாள்.
இதை கேட்ட, ராதிகா எதுவாக இருந்தாலும் என்னிடம் கேளு என்று சொன்னேன்ல என்று சொல்ல, நான் கேட்கலமா டாடி தான் என்ன வேண்டும் என்று கேட்டார். சரி வா நான் வாங்கி தருகிறேன் என்று ராதிகா சொல்ல, அப்போது கோபி வருகிறான். நடந்தது என்ன என்று தெரியாத கோபி, நான் கிளம்பிட்டேன் போகலாமா என்று கேட்க, ராதிகா, நானே கூட்டிக்கிட்டு போகிறேன் என்று சொல்கிறாள்.
இதை கேட்ட ஈஸ்வரி, நீ கூட்டிட்டு போறனு சொல்ற, உன்னை மதிக்காம அவளே கூட்டிக்கிட்டு போறா பாரு என்று சொல்ல, இதை கேட்டு பாக்யா கோபப்படுகிறாள். அடுத்து ஈஸ்வரி இனியா ட்ரெஸ் எடுக்கனும்னு சொன்ன, நீ அவளை கூட்டிக்கிட்டு போ என்று சொல்ல, பாக்யா எதுவும் சொல்லாமல், கோபமான அங்கிருந்து கிளம்பிவிடுகிறாள். காரில் மயூ அழுதுகொண்டே இருக்க ராதிகா அவளை சமாதானப்படுத்த, நீங்க தானே அவரை டாடினு கூப்பிட சொன்னீங்க, அப்படி கூப்பிட்டா பாட்டி ஏன் திட்ராங்க என்று கேட்கிறாள்.
இதை கேட்ட, ராதிகா, அம்மா உன் நல்லதுக்கான சில முடிவுகள் எடுத்தேன். அவங்க பேசுரத்தை பெருசா எடுத்துக்காதம்மா என்று சொல்கிறாள். சாரி நான் இதை சீக்கிரமா சரி பண்றேன் என்று ராதிகா சொல்கிறாள். மறுப்பக்கம், ஈஸ்வரிக்கு மாத்திரி கொடுக்க வரும் பாக்யா கோபமாக இருப்பதை பார்த்து, உன் ப்ரண்டோட பொண்ணை திட்டிட்டேனு மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்கியா என்று கேட்கிறாள்.
நீங்க பண்றது ரொம்ப தப்பு, ராதிகாவுக்கு ஒரு பொண்ணு இருக்குனு தெரிஞ்சுதானே உங்க பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு, மயூவை பார்த்துக்குற ரெஸ்பான்ஸ் அவருக்கு இருக்கு, அவ அப்பானு கூப்பிடாம வேற எப்படி கூப்பிடுவா? ஒரு சின்ன பொண்ணுக்கிட்ட பேசுற மாதிரியா பேசுனீங்க என்று கேட்டு ஈஸ்வரியை பாக்யா திட்டுகிறாள். இதற்கு ஈஸ்வரியும் கோபப்படுகிறாள். அடுத்து வெளியில் சென்ற கோபி வீட்டுக்கு வருகிறான்.
இரவு பிறகு ராதிகாவோடு தூங்க செல்லும் போது இனியா பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார். நான் இனியாவை ரொம்பவே மிஸ் பண்ணுறேன். இனியா என் மீது ரொம்ப பாசமா இருக்கா, வெளியே செல்லும்போது அதிகமாக புகைப்படங்கள் எடுத்தா என்று சொல்லிக் கொண்டே இருக்க, ராதிகா கோபத்தில் எனக்கு தலை வலிக்கிறது என்று சொல்லி படுத்தவிட அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS