SOURCE :- INDIAN EXPRESS
நம்முடைய வீடுகளில் முக்கிய இடத்தை பிடிப்பது சமையல் அறை. அதனை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். அந்த வகையில், நமது சமையலறையை சுத்தமாக வைத்திருப்பது பற்றியும், நமது சமையலை மேம்படுத்த உதவும் குறிப்புகள் பற்றியும் இங்குப் பார்க்கலாம்.
நம்முடைய அன்றாட சமையலில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் உணவுப் பொருளாக தேங்காய் உள்ளது. அதன் பருப்பை வெட்டி எடுக்க அல்லது கீற நாம் அதிகம் சிரமப்படுவோம். அதை தவிர்க்க, உடைத்த தேங்காயை ஒருமணி நேரம் ஃப்ரீசரில் வைத்து விடவும். பிறகு அதனை எடுத்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ளவும். இப்போது நீங்கள் தேங்காயை கீறினால் அவை எளிதில் வந்துவிடும்.
நான்-ஸ்டிக் பேன்களில் கரி பிடிக்கமால் பாதுக்காக்க, அவற்றை நான்-ஸ்கிராச் பஞ்சுகள் மூலம் அன்றாட சோப்பு வாஷிங் செய்து வரவும்.
நம்முடைய வீடுகளில் தயார் செய்யும் சப்பாத்திகளை நாம் ஹாட் -பாக்ஸ்களில் வைத்து வருவோம். ஆனால், அதில் இருக்கும் சப்பாத்திகள் சில மணி நேரங்களில் உண்ண முடியாத அளவுக்கு கடினமாக இருக்கும். அதனைத் தவிர்க்க, ஹாட் பாக்சில் சப்பாத்தி வைக்கும் முன் அதனுள் ஒரு சின்ன தட்டு வைத்து விடவும். இப்போது அதன் மேல் சப்பாத்திகளை வைத்து வந்தால், 3 நாள் ஆனாலும் சப்பாத்தி கெட்டப் போகாது.
கேஸ் பர்னர்களில் ஒட்டியுள்ள கரி போன்ற அழுக்குகளை நீக்க, லைசால் கிட்சன் பவர் கிளீனர் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
தயிர் செய்ய உறைமோர் இல்லாவிட்டால், காய்ச்சிய பாலில் காம்புடன் இருக்கும் வர மிளகாய் சேர்த்து, இரவு முழுதும் அப்படியே வைத்து விடவும். காலை பார்த்தல் கெட்டித் தயிர் தயாராக இருக்கும்.
எண்ணெய் பிடித்த பிளாஸ்டிக் டப்பாக்களை சுத்தம் செய்ய, சுடுதண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர் மற்றும் சோப் ஆயில் சேர்க்கவும். அவற்றில் டப்பாக்களை போட்டு எடுத்து வாஷிங் செய்தால், அவற்றில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு போய்விடும்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS