SOURCE :- BBC NEWS

‘எனக்கும் பயம் இருக்கும்’ – 224 மீ. உயரம், 100 மீ. நீளம்; துபாய் கோபுரங்களுக்கு இடையே அந்தரத்தில் நடந்து சாதனை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“எமிரேட்ஸின் இரு கோபுரங்களுக்கு இடையே இதை அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சவாலானது.” என்கிறார் ஜாக் ரூஸ்.

“இரு கோபுரங்களும் பார்ப்பதற்கு ஒன்றுபோல இருந்தாலும், அவை இரண்டும் வெவ்வேறு உயரங்களை கொண்டவை. எனவே, இரு கோபுரங்களிலும் சரியான உயரமுள்ள இடத்தைக் கண்டறிந்து, இந்த லைனை அமைப்பது சவாலானதாக இருந்தது. அதாவது, ஒருமுனையில் கோபுரம் உயரமாக இருக்கும். எனவே, நான் சற்று மேலே நடந்து, மீண்டும் திரும்பி சற்று கீழே இறங்கி நடக்க வேண்டும்.” என தன் அனுபவத்தை விவரிக்கிறார் அவர்.

“இதை 15 ஆண்டுகளாக செய்துவந்தாலும் எனக்கும் அச்சம் ஏற்படும். ஒவ்வொருமுறையும் காற்றின் சூழலைப் பொறுத்து வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் பாதுகாப்புடன் பயத்தை அனுபவிக்க வேண்டும்” என கூறுகிறார்.

எந்த இருபுள்ளிகளில் லைனை அமைப்பது, எப்படி அமைக்க வேண்டும் என்பதிலும் நடக்கும்போதும் கவனமாக இருப்பேன் எனக்கூறும் அவர், “அவசரமாக நடந்து இதை முடிக்க வேண்டும் என நினைக்க மாட்டேன்,” என்கிறார். அவருடைய இந்த சாதனையைப் பாருங்கள்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU