SOURCE :- INDIAN EXPRESS
கோவையை மையமாக கொண்டு விஷணுபுரம் இலக்கிய வட்டம் இயங்கி வருகிறது. இந்த அமைப்பானது ஆண்டு தோறும் இலக்கிய ஆளுமைகளை பெருமை படுத்தும் வகையில் விஷ்ணுபுரம் எனும் விருதை வழங்கி வருகிறது.
2010-ம் ஆண்டு துவங்கபட்ட இந்த அமைப்பு தொடர்ந்து ஆண்டு தோறும் சிறந்த எழுத்தாளுமைகளின் படைப்புகளை தேர்வு செய்து அவர்களுக்கு விஷ்ணு புரம் எனம் விருதை வழங்கி பெருமை படுத்தி வருகின்றது.
15-ம் ஆண்டின் தொடர்ச்சியாக 2024-ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் இரா.முருகனுக்கு இன்று வழங்கபட்டது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட எழுத்தாளர் விவேக் ஷன்பேக் மற்றும் எழுத்தாளர்கள் ஜெயமோகன், கோபாலகிருஷ்ணன், ரம்யா உள்ளிட்டோர் பங்கேற்று இரா. முருகன் இதுவரை எழுதிய எழுத்துக்கள் மற்றும் அவரது புத்தகங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து எழுத்தாளர் இரா. முருகன் எழுதிய முப்பட்டை கண்ணாடியின் உலகம் எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து நவீன தமிழ் இலக்கியத்திற்க்கு செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளை பெருமை சேர்க்கும் வகையில், அரசூர் வம்சம் என்ற பெரு நாவலை தொடர் வழியாக தமிழ் இலக்கியத்தில் படைத்து பல்வேறு வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தமைக்காக எழுத்தாளர் இரா. முருகனுக்கு இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கபட்டது. மேலும், விஷணுபுரம் இலக்கியவட்டம் சார்பாக 5 லட்ச ரூபாய் பணமுடிப்பும் வழங்கபட்டது.
செய்தி: பி. ரஹ்மான்
SOURCE : TAMIL INDIAN EXPRESS