SOURCE :- BBC NEWS

ஐபிஎல், பிசிசிஐ

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் மீண்டும் தொடங்கப்படுவதற்கான எந்த சாத்தியமும் தேசத்தின் மனநிலையைப் பொருத்துதான் இருக்கும் என்கிறார் முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா.

இந்திய – பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தால் ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டது.

பிரிட்டன் உட்பட பல வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஏற்கெனவே இந்தியாவைவிட்டு வெளியேறத் தொடங்கினர். ஐபிஎல்-இல் இன்னும் 16 போட்டிகள் மீதம் உள்ளன. இவை மே 25-ஆம் தேதி வரை நடைபெற இருந்தது.

“இந்தியாவிற்கு ஒரு தேசமாக கிரிக்கெட் எந்த அளவிற்கு முக்கியமோ அதை விட முக்கியமான சில விஷயங்கள் உள்ளன,” என பிபிசி ஸ்போர்ட்ஸிடம் தெரிவித்தார் தாஸ்குப்தா.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

கடந்த வியாழன்று பாகிஸ்தான் தனது மூன்று ராணுவ தளங்களை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக இந்தியா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

புதன்கிழமை காலையில் இருந்து பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் இந்திய வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும் 57 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதலின் பின் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டையும் பாகிஸ்தான் மறுத்துள்ளது.

ஐபிஎல் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்கள் என்னென்ன?

ஐபிஎல், பிசிசிஐ

பட மூலாதாரம், IPL/BCCI

இந்தியாவுக்கு எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தாஸ்குப்தா, ஒரு வாரத்தில் ஐபிஎல் மீண்டும் தொடங்குவது சாத்தியம் தான் என்றாலும் யதார்த்தமானது இல்லை என்று கூறுகிறார்.

மீதமுள்ள போட்டிகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நடத்துவது, நேரத்தைக் குறைப்பதற்கு ஒவ்வொரு நாளும் இரண்டு போட்டிகளாக நடத்துவது உள்ளிட்டவை மீண்டும் ஐபிஎல்-ஐ தொடங்குவதற்கான சாத்தியங்கள்.

எனினும் வெளிநாட்டு வீரர்கள் இல்லையென்றால் தொடரை மீண்டும் தொடங்குவது சாத்தியமில்லை என்கிறார் தாஸ்குப்தா.

ஐபிஎல்-இல் விளையாடும் 10 இங்கிலாந்து அணி வீரர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பிச்செல்லும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களும் நாடு திரும்புவதாகக் கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்தியாவில் உள்ளனர்.

குறுகிய காலத்தில் தொடரை தொடங்க முடியவில்லை என்றால் அதன் நிதி மதிப்பை கருத்தில் கொண்டு வருடத்தின் இறுதியில் மீதமுள்ள போட்டிகளை நடத்தி முடிக்க பலத்த ஆதரவு இருக்கும்.

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் என்னவாகும்?

இந்தியா, பாகிஸ்தான், பிசிசிஐ, ஐ.பி.எல்

பட மூலாதாரம், Reuters

கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக 6.02 பில்லியன் டாலர் மதிப்புள்ள உரிமம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த தொடர் நிறுத்தப்படுவதற்கான அறிவிப்பிலும் பிசிசிஐ இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக அதன் ஒளிபரப்பாளர் ஜியோஸ்டாருக்கு நன்றி தெரிவித்திருந்தது.

மீதமுள்ள ஐபிஎல் தொடர் பின்னர் நடத்தப்பட்டால் ஆகஸ்டில் நடைபெறும் தி ஹன்ட்ரட் தொடருடன் அட்டவணை குழப்பம் ஏற்படுமா என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கவலை தெரிவிக்கலாம். அப்படியென்றால் செப்டம்பரில் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

ஆனால் அந்த மாதம் ஆசியக் கோப்பை நடத்தப்பட இருந்தது. தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெறாது என்பதால் அந்தத் தொடர் ரத்து செய்யப்பட்டு மீதமுள்ள ஐபிஎல் தொடர் நடத்தப்படலாம்

அது போக இனி வரும் சர்வதேச இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் பற்றி நீண்ட கால கேள்விகள் உள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான போட்டிகள் பற்றி தன்னால் நினைத்துகூட பார்க்க முடியாது என்கிறார் தாஸ்குப்தா.

தற்போது அதைப்பற்றி பேசுவது சரியாக இருக்காது என்று கூறும் தாஸ்குப்தா மேலும் “எதிர்காலத்தில் ஒருநாள் இதைப்பற்றி பேசலாம். பார்ப்போம். தற்போது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி பேசுவது அற்பமானதாக இருக்கும்” என்றார்.

சமீபத்திய நிகழ்வுகளுக்கு முன்பாக கூட இருநாடுகளும் சர்வதேச தொடர்களில் மட்டும் தான் விளையாடி வந்தன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து சர்வதேச தொடர்களில் இரு நாடுகளின் அணிகளும் விளையாடும் போட்டிகள் இரு நாடுகளில் நடத்தப்பட்டால் அவை வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.

அடுத்து அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடத்தப்பட இருக்கும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இத்தகைய சூழல் எழ உள்ளது. பாகிஸ்தான் இந்த்த் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளதால் இந்தப் போட்டி வேறொரு நாட்டில் நடத்தப்படும்.

எனினும் எங்கு நடந்தாலும் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான போட்டி நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு காண்பது தற்போது மிகவும் விரைவானது என ஐசிசி புரிந்து கொண்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு எமீரகத்துக்கு மாற்றப்படாமல் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU