SOURCE :- INDIAN EXPRESS

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு, மீண்டும் திரும்பிய வண்ணம் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில், சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக நாளை (ஜன.20) சிறப்பு புறநகர் ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி நாளை, 20ம் தேதி தாம்பரம் – காட்டாங்குளத்தூர்- தாம்பரம் இடையே 12 பெட்டிகள் கொண்ட சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

20-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 மணி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்திறங்கும் பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SOURCE : TAMIL INDIAN EXPRESS