SOURCE :- BBC NEWS

காணொளி: கேரளாவில் பயணம் வழியே தங்கள் அடையாளத்தை தேடும் விவாகரத்தான பெண்கள்
49 நிமிடங்களுக்கு முன்னர்
வழக்கமாக மக்கள் திருமணத்தைக் கொண்டாடுவார்கள், விவாகரத்தை மறைப்பார்கள். ரஃபியா 2025-இல், பிரேக் ஃப்ரீ ஸ்டோரிஸ் என்ற ஒரு குழுவைத் தொடங்கினார்.
விவாகரத்து பெற்ற பெண்களே இதன் உறுப்பினர்கள்.
இவர்கள், ‘கடவுளின் தேசம்’ என அழைக்கப்படும் கேரளா வழியாக ஒரு பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் தங்களின் அடையாளத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கே, அவர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல், சுதந்திரமாகப் பேசுகிறார்கள்.
கேரளாவின் பசுமையான மலைகளுக்கு மத்தியில், இந்தப் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறார்கள்.
விவாகரத்து வாழ்க்கையின் முடிவு அல்ல, அது மீண்டும் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பு என்று அவர்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU







