SOURCE :- BBC NEWS

கென்யா: போராட்டக்காரர்களை சுட்டவர்கள் பற்றி பிபிசி விசாரணையில் தெரிய வந்த உண்மை
12 நிமிடங்களுக்கு முன்னர்
இவர் எரிக். கென்ய நாடாளுமன்றத்துக்கு வெளியே செல்லும்போது அவர் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார். நாடாளுமன்றத்துக்கு வெளியே சென்றபோதும் அவரால் வீட்டுக்கு செல்ல முடியவில்லை.
27 வயதான அவர், நைரோபி பல்கலைக்கழக மாணவராக இருந்தார். ஜூன் 25, 2024 அன்று அரசின் நிதி மசோதாவுக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் திரண்டு நடத்திய போராட்டத்தில் இவரும் பங்கேற்றார். அந்த மசோதா சட்டமாவதைத் தடுக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், வழியில் அவர்கள் கண்ணீர் புகை, தடியடி மேலும் துப்பாக்கி சூட்டையும் எதிர்கொண்டனர். அதில் உயிரிழந்த குறைந்தது மூன்று பேரில் எரிக்கும் ஒருவர்.
எரிக் கொல்லப்படுவதற்கு முன்னர் ஆயுததாரி ஒருவர் அப்பகுதியில் தெரிந்தார். அடுத்த நொடியிலேயே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. ஆயுததாரியின் முகத்தை நம்மால் பார்க்க முடியவில்லை என்றாலும், அவரது சீருடையில் தனித்துவமான அம்சங்கள் இருந்தன. அவற்றை, துப்பாக்கி சூடு நடந்த முதல் 10 நிமிடங்களில் எடுக்கப்பட்ட 150க்கும் மேலான புகைப்படங்களுடன் ஒப்பிட்டோம்.
கென்ய பாதுகாப்புப் படைகளில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள் சிலர் அந்த சீருடை கென்ய ராணுவத்தினுடையது என்பதை உறுதி செய்தனர். கென்ய ராணுவம் குடிமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது வழக்கம் அல்ல.
கென்ய பாதுகாப்புப் படைகள் பிபிசியிடம் கூறுகையில், தங்கள் பணியாளர் குறித்து விசாரிக்குமாறு எந்த கோரிக்கையும் இல்லை என்றும் சட்டத்தை தொடர்ந்து நிலைநாட்டுவதாகவும் கூறியது
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU