SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிட்டுக்குருவிக்கு பைக் கொடுத்த தஞ்சை இளைஞர் – காணொளி
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சித்திக் பாஷா. கீழவாசல் பகுதியில் வசிக்கும் இவர் தன்னிடம் இருசக்கர வாகனம் இருந்தாலும் அதை பயன்படுத்தாமல் தினமும் சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள அலுவலகத்துக்கு பேருந்தில் பயணித்து வருவதாக தெரிவிக்கிறார். இதற்கு காரணம், சிட்டுக்குருவிகள்.
சித்திக் பாஷாவின் ஸ்கூட்டரில் சிட்டுக்குருவி ஒன்று குஞ்சு பொரித்துள்ளது. இதைப்பற்றி பேசியவர், “அந்த குஞ்சுகள் பறக்க ஒரு வார காலம் ஆகலாம் என கூறும் இளைஞர், தினந்தோறும் வேலைக்கு சென்று வரும்போது வண்டியின் இருக்கையில் தாய் குருவிக்கும் தண்ணீர் வைத்தும் குருவிகளை கவனித்தும் வருகிறார்” என்றார்.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல சிட்டுக்குருவிக்காக பைக்கை கொடுத்த தஞ்சை இளைஞர் சித்திக் பாஷாவை அப்பகுதி மக்கள் பாராட்டுகிறார்கள்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU