SOURCE :- INDIAN EXPRESS

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் நடிப்பில், அடுத்து விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்கள் வெளியாக உள்ள நிலையில், துபாய் ரேஸ் முடியும் வரை படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அஜித் அதிரடி முடிவு செய்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், படங்களில் நடிப்பதை தவிர, துப்பாக்கிச்சுடுதல், பைக்ரைடு செல்லுதல், மற்றும் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்பது என விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வமாக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்து முடித்துள்ள அஜித், துபாயில் நடைபெறும், கார் ரேஸில் பங்கேற்க உள்ளார்.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு, அஜித் குமார் கார் ரேஸிங் என்ற நிறுவனத்தை தொடங்கிய அஜித், தனது கார் ரேஸிங் அணியையும் கட்டமைத்தார். தற்போது படப்பிடிப்பை முடித்துள்ள அஜித், கார் ரேஸிங் பந்தையத்திற்கு தாயராகும் வகையில், துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அஜித் பயிற்சியில் ஈடுபட்டபோது, அவரது கார் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

அதே சமயம் அந்த விபத்தை பொருட்படுத்ததாத அஜித், அடுத்த நாளே பயிற்சியில் ஈடுபட்டதாகவும், போட்டிக்கான அஜித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தனது பெர்ராரி காரில், அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அஜித் ரசிகர்களும் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று கூறி வருகின்றனர்.

Advertisment

Advertisement

இதனிடையே கார் ரேஸ் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அஜித்குமார், வரும் அக்டோபர் மாதம் வரை 9 மாதங்களுக்கு நான் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கார் பந்தையத்தில் அதிகம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அக்டோபருக்கு பின் அடுத்த ஆண்டு மார்க்க்கு இடைப்பட்ட காலத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். எனது 18 வயதில் கார் பந்தைய பயிற்சியை தொடங்கினேன்.

2003-ம் ஆண்டு பி.எம்.டபிள்யூ கார் பந்தையத்தில் முழுமையாக கலந்துகொண்டு முடித்தேன். 2004-ம் ஆண்டு, பிரிட்ஸ் பார்முலா 3 கார் பந்தையத்தில் கலந்துகொண்டேன் ஆனால் அதை என்னால் முழுமையாக முடிக்க முடியவில்லை. 18 வயதில் பயிற்சியை தொடங்கினாலும் அதன்பிறகு நடிக்க தொங்கிவிட்டதால், கார் பந்தையத்தில் கவனம் செலுத்த முடியாமல் போனது. 2010-ம் ஆண்டு ஐரோப்பிய கார் பந்தையத்தில் கலந்துகொண்டாலும் அதையும் முழுமையாக முடிக்க முடியவில்லை என்று அஜித் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS