SOURCE :- BBC NEWS

சீனாவில் அழகுக்காக 100க்கும் மேலான அறுவை சிகிச்சைகளை செய்துகொண்ட இளம்பெண்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
“கடந்த 20 வருடங்களில், 100க்கும் மேற்பட்ட அழகுசார் சிகிச்சைகளை எடுத்துள்ளேன். இன்னும் அழகாக மாறுவதற்கான முயற்சியை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன். சிறந்த பெண்களின் எடை 50 கிலோவுக்கு மேல் இருக்காது” என்கிறார் சீனாவைச் சேர்ந்த அப்பி வு.
அப்பி வு, ஒரு பியூட்டி இன்ப்ளூயன்சர். இதுவரை அழகு சிகிச்சைகளுக்காக 5 லட்சம் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளார்.
சீனாவின் அழகு சிகிச்சைகளுக்கான தேவை, ஆன்லைன் வீடியோக்களால் தூண்டப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 2 கோடி சீனர்கள் அழகுசாதனப் பொருட்களுக்கு செலவழிக்கிறார்கள். ஆனால் அங்கு சிகிச்சைகளுக்கு போதுமான தகுதிவாய்ந்த நிபுணர்கள் இல்லை.
இந்த தொழில்துறையை ஒழுங்குபடுத்த சீன அரசாங்கம் முயற்சித்த போதிலும், குறைந்தபட்சம் 1,00,000 பேர் இதில் முறையான தகுதிகள் இல்லாமல் பணிபுரிகின்றனர்.
முழு விவரம் காணொளியில்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU