SOURCE :- INDIAN EXPRESS
நமது இணையப் பக்கத்தில் அன்றாட பல்வேறு கிட்சன் டிப்ஸ் எனும் சமையல் குறிப்புகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில், இன்று நாம் சில முக்கிய சமையல் குறிப்புகளை பார்க்க உள்ளோம். அவை பின்வருமாறு:-
கருவேப்பிலையை நாம் பிரிட்ஜில் வைக்கும் போது அவை ஈரப்பதமாக அல்லது தண்ணீருடன் இருந்தால் சீக்கிரமே அழுகியது போல் மாறிவிடும். அதனை தவிர்க்க, கொத்தாக இருக்கும் கருவேப்பிலையை அதன் குச்சி பகுதியில் ரப்பர் பேண்ட் அல்லது கயிறு வைத்து கட்டிக் கொள்ளவும். அதனை அப்படியே காற்றுப்படும் படி தொங்க விடும்போது அதில் இருக்கும் தண்ணீர் வடிந்து விடும். தண்ணீர் முழுவதுமாக வடிந்தவுடன் அவற்றை எப்போதும் போல் பிரிட்ஜில் வைத்தால், அவை புதிது போன்று ஃபிரஷாக இருக்கும்.
மிக்சியில் பட்டர் போன்றவற்றை அரைக்கும் போது அதில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்கும். அவை சுத்தமாக போக, சுடுதண்ணீரை மிக்சி ஸாரில் ஊற்றி ஊற வைக்கவும். தண்ணீர் ஆறிய பிறகு கீழே ஊற்றி விட்டு கழுவினால் மிக்சி ஸார் சுத்தமாக இருக்கும்.
டீ வடிகட்டும் சில்வர் வடிகட்டியில் கறை படிந்து இருக்கும். இதை சுத்தம் செய்ய பல் துலக்கும் பிரஸ் எடுத்து அதில் உப்பு தொட்டு வடிகட்டியை சுத்தம் செய்யலாம்.
குப்பை போடும் டப்பாவில் பிளாஸ்டிக் கவர் போட்டு பயன்படுத்தி வந்தாலும் அதில் கறை ஒட்டி இருக்கும். இதற்கு, குப்பை டப்பாவில் பிளாஸ்டிக் கவர் போடும் அதில் நியூஸ் பேப்பர் போட்டு விடவும். அதன் மேல் பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்தால் கறை படிவதை தவிர்க்கலாம்.
பெருஞ்சீரகம் எனும் சோம்பு சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க, அவற்றை மிதமான சூட்டில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் சீக்கிரமாக வதக்க அதனுடன் உப்பு சேர்க்கவும். அப்படி உப்பு சேர்க்கும் போது வெங்காயம் சீக்கிரமாக வதங்கும்.
சாதம் வடிக்கும் போது அவை பல நேரங்களில் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும். அதனை தவிர்க்கவும், சாதம் உதிரி உதிரியாக வரவும் லெமனை பிழிந்து ஒரு ஸ்பூன் அளவு மட்டும் சேர்க்கவும்.
பச்சை மிளகாய் வெட்டும் முன் கையில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், அதன் காரம் கையில் ஒட்டாது.
தோசை மொறுமொறுப்பாக வர, மாவு ஊற்றும் முன்பு சுத்தமான கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்க்கவும். இதன்பிறகு தோசை ஊற்றி எடுத்தால், தோசை மணமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS