SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜோ பைடனுக்கு வந்துள்ள புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக அவரது அலுவலகம் கூறியிருக்கிறது.

புற்றுநோயின் தீவிரத்தை மதிப்பீடும் Gleason score-படி பைடனுக்கு இருக்கும் இந்த புற்றுநோய் 10க்கு 9 என்ற அளவில் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன? இதை ஆண்கள் அறிவது எப்படி?

ஆண்களோட இனப்பெருக்க அமைப்பில் புராஸ்டேட் சுரப்பி உள்ளது. இது ஆணுறுப்புக்கு சிறுநீர்ப்பைக்கும் மத்தியில் அமைந்துள்ளது. Sperm அதாவது விந்தணுக்கள், Semen அதாவது விந்துதிரவமாக மாறுவதற்கு புராஸ்டேட் சுரப்பி அதிமுக்கியமானது.

இது ஒரு walnut size-இல் தான் முதலில் இருக்கும், ஆண்கள் வளர வளர இதுவும் பெரிதாகுது. PSA எனும் prostate-specific antigen சோதனை மூலமாக பிராஸ்டேட் நிலையை அறிந்துகொள்ளலாம்னு மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இது ஒரு சாதாரண ரத்த பரிசோதனை மூலமாவே அறியமுடியும்.

45-50 வயதுக்குப் பிறகு ஆண்களுக்கு புராஸ்டேட் தொடர்பான பிரச்னைகள் வந்தாலும், அவை அனைத்தும் புற்றுநோய் இல்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். புரோஸ்டேட் புற்றுநோய் ஆண்களுக்கு வரும் பொதுவான புற்றுநோய்.

இந்த நோய் பாதிப்பை கண்டறிய குறிப்பிட்ட எந்த அறிகுறிகளும் இல்லை. ஆனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சொட்டு சொட்டா மெதுவா சிறுநீர் வெளியேறுவது போன்றவை இருந்தால் உடனடியாக சோதித்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அமெரிக்காவில் எட்டில் ஒருவருக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருவதாக American Cancer Society கூறுகிறது.

மோசமான உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றுடன் இந்த புற்றுநோய் தொடர்புடையது. ரோபோடிக் அறுவை சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை உள்ளிட்டவை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆயுளை 10-15 ஆண்டுகள் நீட்டிக்க முடியும்னு மருத்துவர்கள் குறிப்பிடுறாங்க.

புற்றுநோய் எலும்புகளுக்குச் செல்வது ஆபத்தானது. பைடனுக்கு தீவிரமான புற்றுநோய் நிலை இருப்பதால், அவருக்கான சிகிச்சை முறைகள் குறித்து அவரது குடும்பத்தினர் ஆராய்ந்து வருகிறார்கள்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU