SOURCE :- INDIAN EXPRESS

மதுரை மாவட்டம், அ. வல்லாளப்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அதில், “இன்று மாலை, மதுரை மாவட்டம் அ. வல்லாளப்பட்டி கிராமத்தில், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த சகோதர சகோதரிகளை நேரில் சந்தித்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவது குறித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisment

Advertisement

மதுரை அரிட்டாப்பட்டி, அ. வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி கிராமங்களைச் சுற்றி அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை, நிறுத்தி வைத்திருப்பதாக, நமது மாண்புமிகு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி அவர்கள் அறிவித்திருந்தார். தமிழக அரசையும், சுரங்கம் அமைப்பது தொடர்பாக, மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார். 

நமது மாண்புமிகு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி அவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, சென்னை வரவிருக்கிறார். அவரை, நமது கிராமப் பெரியவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் முடிவில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை, நமது மத்திய அமைச்சர் அவர்கள் அறிவிக்கவிருக்கிறார். 

விவசாயிகள் நலன் சார்ந்தே நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் எப்போதும் முடிவு எடுப்பார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு, பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன். நமது பாரதப் பிரதமர் சார்பாகவும், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

SOURCE : TAMIL INDIAN EXPRESS