SOURCE :- INDIAN EXPRESS

பல கோடி ரூபாய் நில மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக யூடியூபர் சவுக்கு’ சங்கர், தனது சவுக்கு மீடியா நடத்தும் யூடியூப் சேனல் மற்றும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கு அளித்த பேட்டியில் தவறான தகவல்களை பரப்பியதாக மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

Advertisment

பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, நீதிமன்ற அமர்வின் போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17, 2025) இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னையில் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) காவல்துறையின் நில மோசடி புலனாய்வு பிரிவு II இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சிவசுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) இன் பல்வேறு விதிகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது புகாரில், கடந்த ஆண்டு தென் சென்னை மாவட்ட பதிவாளரின் உத்தரவின் பேரில் பதிவு செய்யப்பட்ட நில மோசடி வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர், சிவசுப்பிரமணியன் தனது விசாரணையின் போது, கடந்த டிசம்பர் 5, அன்று நில மோசடி வழக்கு தொடர்பாக கவுக்கு சங்கர், தனது சொந்த யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை பார்த்து, அவரை விசாரணைக்கு அழைத்துள்ளார்.

தொடர்ந்து டிசம்பர் 16,  அன்று சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஆஜராகி, இன்ஸ்பெக்டரின் அதிகாரத்தை அவர் கேள்வி எழுப்பிய நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார் என்று புகார் அளித்துள்ளார். மேலும், சவுக்கு சங்கர் எந்த அடிப்படையில், நில மோசடி தொடர்பாக ஒரு நிரபராதி மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்தார் என்று கேட்டபோது, தனது கூற்றை நிரூபிக்க அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது.

Advertisment

Advertisement

இதன் காரணமாக தனது யூடியூப் சேனலில் காவல்துறையினருக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் நில மோசடி வழக்கில் விசாரணையைத் தடம் புரளச் செய்ய சவுக்கு சங்கர் முயற்சித்ததாகக் குற்றம் சாட்டி உதவி காவல் ஆணையரிடம் (ஏசிபி) இன்ஸ்பெக்டர் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலும், சவுக்கு சங்கர், காவல்துறையினருக்கு எதிரான அவதூறுகளைத் தொடர்ந்தார் என்று புகாரில் கூறியுள்ளார்.

புகாரைத் தொடர்ந்து, ஏசிபி பி. சம்பத் டிசம்பர் 18 அன்று சவுக்கு மீடியா நெட்வொர்க், மனுதாரர் மற்றும் யூடியூப் சேனல் நேர்காணல் செய்பவர்கள் லியோ மற்றும் மாலதி ஆகியோருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்தார். பிஎன்எஸ் பிரிவுகள் 221 (ஒரு அரசு ஊழியரை கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல்), 222 (ஒரு அரசு ஊழியருக்கு உதவத் தவறுதல்) மற்றும் 353(1)(b) மற்றும் (2) (அரசுக்கு எதிராக குற்றத்தைத் தூண்டும் நோக்கத்துடன் தவறான அறிக்கைகளை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

SOURCE : TAMIL INDIAN EXPRESS