SOURCE :- INDIAN EXPRESS
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை வாஞ்சிநாதன் வீதி பகுதியில் இன்று காலை 5.00 மணி அளவில் திடீரென மிக அதிக சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இது என்ன என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் உடனடியாக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவருமான நேருவிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக காலை 6.00 மணி அளவில் சம்பவ இடத்துக்கு விரைந்து பெரியக்கடை காவல் நிலைய ஆய்வாளர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து வெடித்தது மர்ம பொருளா அல்லது தற்போது உருளையன்பேட்டை தொகுதி அமைதியாக உள்ளது என சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக யாரேனும் சமூக விரோதிகளை ஏவி விட்டு வெடிகுண்டு வெடிக்க செய்தார்களா என்று காவல்துறையினை விசாரணை மேற்கொண்டனர். நேரு(எ)குப்புசாமி MLA தெரிவித்து இது அரசியல் சமூகவிரோதிகளின் செயலாக இருக்கும் என அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS