SOURCE :- INDIAN EXPRESS
கட்டுரை: ஜஸ்டின் ஸ்டெப்பிங்
ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் பால் குடிப்பது குடல் புற்றுநோயைத் தடுக்க உதவும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து கேன்சர் ரிசர்ச் நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தினசரி ஒரு கிளாஸ் அளவுக்கு பால் குடிப்பது குடல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் குடல் புற்றுநோய் வழக்குகள் 45,000 என பதிவாகிறது.
இது நாட்டின் நான்காவது மிகவும் பொதுவான புற்றுநோயாகவும் – உலகளவில் மூன்றாவது – ஆனால் இவற்றில் பல தடுக்கக்கூடியவை என்றும் ஆய்வு கூறுகிறது.
கேன்சர் ரிசர்ச் நிறுவன தரவுகளின்படி, குடல் புற்றுநோய்களில் 54% ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பதன் மூலம் தடுக்க முடியும் என்று கூறுகிறது.
புகைபிடித்தல், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மது அருந்துதல், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது மற்றும் தவறான உணவு முறை ஆகியவை குடல் புற்றுநோயின் குறிப்பிடத்தக்க காரணிகளாகும்.
புற்றுநோயியல் நிபுணராக, எனது நோயாளிகளுக்கு உணவு மற்றும் வாழ்க்கை முறை எவ்வாறு ஆரோக்கியத்தை பாதிக்கும், புற்றுநோயை உருவாக்கும் அபாயம் உள்ளிட்டவற்றைப் பற்றி நான் ஆலோசனை வழங்குவேன்.
ஆனால் இந்த ஆராய்ச்சி – உணவு மற்றும் நோய் பற்றிய மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்று. இந்த ஆய்வின் மூலம் ஆரோக்கியமாக உயிர் வாழ எளிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஒரு நாளைக்கு கூடுதலாக ஒரு கிளாஸ் பால் குடிப்பது, ஆல்கஹால் மற்றும் சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவதை குறைப்பது புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும்.
ஒரு நாளைக்கு 20 கிராம் மது அருந்துவது குடல் புற்றுநோய் அபாயத்தை 15% அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 30 கிராம் சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வது குடல் புற்றுநோய் அபாயத்தில் 8% அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பால் குடிப்பது மற்றும் குடல் புற்றுநோய் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய, இரு முனை அணுகுமுறையை எடுத்தனர்.
முதலில், அவர்கள் 542,000 க்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து மரபணு தரவுகளை பகுப்பாய்வு செய்தனர் மற்றும் மாறுபாடுகளில் கவனம் செலுத்தினர். டிஎன்ஏவில் சிறிய மாற்றங்கள் – லாக்டேஸ் நிலைத்தன்மையுடன் தொடர்புடையது, இளமைப் பருவத்தில் லாக்டோஸை ஜீரணிக்கும் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
இரண்டாவதாக, நிறுவனம் அதன் ஆய்வு பங்கேற்பாளர்களிடமிருந்து அவர்களின் தினசரி பால் உட்கொள்ளல் உட்பட விரிவான உணவுத் தகவல்களைச் சேகரித்தது. இந்த இரண்டு தரவுத் தொகுப்புகளையும் இணைப்பதன் மூலம், குடல் புற்றுநோய் அபாயத்தில் பால் குடிப்பவர்களின் காரண விளைவை ஆராய்ச்சியாளர்கள் சிறப்பாக மதிப்பிட முடிந்தது.
ஆங்கிலத்தில் படிக்க: Why a daily glass of milk really could reduce bowel cancer risk – an oncologist explains
SOURCE : TAMIL INDIAN EXPRESS