SOURCE :- INDIAN EXPRESS
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியின்போது, 100 கிராம் தங்கம் கட்டியைத் திருடி வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோது, ஒப்பந்த ஊழியர் பென்சிலய்யா என்பவர் கைது செய்யப்பட்டார்.
உலகப் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா முழுவதும் தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக அளவில் மிகப் பெரிய வருமானம் பெறும் இந்துக் கோவிலாக உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாளைக்கு சராசரியாக 60,000 முதல் 70,000 வரையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். பிரம்மோற்சவம், ரதசப்தமி போன்ற மிக முக்கிய உற்சவங்கள் நடைபெறும் காலங்களில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டுகிறது.
அதே போல, திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இப்படி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் தினமும் எண்ணப்படுகிறது. இதற்காக கோவில் தேவஸ்தான பணியாளர்களுடன், நியமிக்கப்பட்ட சேவாதாரிகள், பணம் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் பென்சிலய்யா என்பவர் 100 கிராம் தங்க பிஸ்கட்டை திருடி மறைத்து எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல முயன்றபோது, கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரிடம் இருந்து 100 கிராம் தங்க பிஸ்கட் கைப்பற்றப்பட்டது.
திருப்பதி கோயில் உண்டியல் எண்ணும் பணியின்போது, 100 கிராம் தங்க பிஸ்கட்டை திருடி எடுத்துச் செல்ல முயன்ற ஒப்ப்ந்த ஊழியர் பென்சிலய்யாவை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS