SOURCE :- BBC NEWS

நீருக்கு அடியில் திருமணம் செய்துகொண்ட ஸ்கூபா டைவிங் செய்யும் தம்பதி
17 நிமிடங்களுக்கு முன்னர்
பிரிட்டனில் நீருக்கடியில் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு டைவிங் குளத்தில் புதுமண தம்பதிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
“நாங்கள் நீருக்குள் சந்தித்ததால் எங்கள் திருமண உறுதிமொழியை இங்கு எடுக்க முடிவு செய்தோம். ஸ்கூபா டைவிங் விளையாட்டின் மீது எங்களுக்கு அதிக காதல் உண்டு” என்று மணமகன் ஆடம் ஹார்பர் கூறுகிறார்.
“இதைச் செய்வதன் மூலம் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம். எங்கள் பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள். எங்களுக்கு நெருக்கமானவர்கள் சிலர் தரையிலும், சிலர் தண்ணீரிலும் எங்களுடன் இருந்தார்கள்” என்று மணமகள் எமி ஹார்பர் தெரிவித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC