SOURCE :- INDIAN EXPRESS
மூக்கிரட்டை கீரையின் நன்மைகள் பற்றி சித்த மருத்துவர் கற்பகம் கூறியுள்ளார். அவர் கூறுகையில், மூக்கிரட்டை கீரை எளிமையாகவே கிடைக்கும். சாலை ஓரம், வீட்டு பக்கத்திலேயே இந்த கீரையை பார்க்க முடியும். இந்த கீரை தரையோடு படர்ந்து இருக்கும். நம் முன்னோர்கள் இதை வாரத்தில் 1 முறை 2 முறை என தொடர்ந்து எடுத்து வந்தார்கள். இதில் அவ்வளவு நன்மைகள் இருக்கு.
உடலின் ராஜபாகம் என சொல்லப்படும் இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னியை பலப்படுத்துவது என்று நம்பினார்கள். அதனால் பயன்படுத்தி வந்தார்கள்.
நெஞ்சில் சேரும் சளி, கபத்தை வெளியேற்றும் தன்மை மூக்கிரட்டை கீரைக்கு உள்ளது. இந்த கீரையின் முக்கியமான பயனாக சொல்லப்பட்டது இது வாத நோய்களை தணிக்கும். வாத நோய்கள் என்பது மூட்டு தொடர்பான பிரச்சனைகளை ஆகும்.
அடுத்தாக நாள்பட்ட சிறுநீர் செயலிழப்பு, சிறுநீர் கல், தொற்று ஆகிய பிரச்சனைகளுக்கும் இந்த கீரை பலன்களை தருகிறது எனக் கூறப்பட்டுள்ளது. சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கீரையை தனியாக எடுக்க வேண்டும். வேறு எந்த மருந்துகளும் பயன்படுத்தாமல் சித்த மருத்துவரின் கண்காணிப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் கூறினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS