SOURCE :- BBC NEWS

பஹல்காம் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிய பிறகு உடைந்து அழுத டிரைவர்
19 நிமிடங்களுக்கு முன்னர்
பிப்ரவரி 22 அன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது அப்பாவி பொதுமக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அந்த தாக்குதலின் போது, அந்த பகுதியில் சிக்கியிருந்த சுற்றுலாப்பயணிகளை பாதுகாப்பாக மீட்டு, தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் அங்கே வாகன ஓட்டியாக பணியாற்றும் ஆதில் என்ற உள்ளூர்வாசி.
சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு உதவிகளைச் செய்து கொடுத்தது மட்டுமின்றி, அவர்களை பத்திரமாக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அவர், நடந்த நிகழ்வுகளை நினைத்து கண்ணீர்விட்டு அழத் துவங்கினார்.
இந்த தாக்குதல் குறித்து அவர் கூறியது என்ன? முழு விபரம் வீடியோவில்!
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC