SOURCE :- INDIAN EXPRESS

பாக்கியலட்சுமி சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்த வாரத்திற்கான ப்ரமோவில், மீண்டும் கோபி – பாக்யா இணையும் தருணம் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், 3 குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்தாலும், பாக்யாவை விட்டுவிட்டு, தனது பள்ளி தோழி ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி, தொழிலில் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், பாக்யா, தனது தொழிலில் முன்னேற்றம் கண்டார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத கோபி பல கெடுதல்களை செய்த நிலையில், பாக்யா ரெஸ்டாரண்டில் கெட்டுப்போன இறைச்சியை கலந்தார்.

இந்த சம்பவம் பாக்யாவுக்கு தெரிந்து கோபி மீது கம்ளைண்ட் கொடுத்தார். அதன்பிறகு, ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்ட கோபியை மீட்ட பாக்யா அவரது உயிரை காப்பாற்றினார். இதனால் கோபி மனம் திருந்திய நிலையில், மீண்டும் பாக்யா வீட்டிலேயே தங்கியுள்ளார். இவரை எப்படியாவது பாக்யாவுடன் சேர்த்து வைக்க வேண்டும். ராதிகாவை கோபியின் வாழ்க்கையில் இருந்து விரட்ட வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார் ஈஸ்வரி.

தனது திட்டத்தை ராதிகாவின் மகள் மயூவிடம் இருந்து தொடங்கியுள்ள ஈஸ்வரி அடுத்து என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் எடுத்த ஆர்டரை முடிக்க பாக்யா, கோபியின் ரெஸ்டாரண்டில் இருந்து ஆட்களை வாங்கியுள்ள நிலையில், கோபியும் சமையல் செய்கிறார். வேட்டி சட்டையுடன் இருப்பதை பார்த்த ஈஸ்வரி மகிழ்ச்சியாக இருக்கிறார். அப்போது பாக்யா ஈஸ்வரியிடம் கோல உருண்டையை டேஸ்ட் பார்க்க சொல்கிறார்.

Advertisment

Advertisement

அப்போது அதை டேஸ்ட் செய்யும் கோபி, இது மாதிரி கோலா உருண்டையை சாப்பிட்டதே இல்லை என்று சொல்ல, ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். அதன்பிறகு, பாக்யாவின் திறமைக்கு, கோபி பாராட்டு தெரிவிக்க, பாக்யாவும் நன்றி சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதை பார்த்த ஈஸ்வரி, ராதிகாவிடம் சென்று, கோபி பாக்யாவுடன் இருந்தால் சந்தோஷமா இருப்பான். இப்போ அந்த சந்தோஷத்திற்கு தடையாக இருப்பது நீதான். நீ அவனை விட்டு போய்விட்டால் அவன் பாக்யாவுடன் சந்தோஷமாக இருப்பான் என்று சொல்கிறார்.

இதை கேட்ட ராதிகா எந்த முடியும் சொல்லாமல், கடுப்பில் அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இந்த ப்ரமோ முடிவடையும் நிலையில், ராதிகா என்ன முடிவு எடுப்பார்? கோபி பாக்யா மீண்டும் சேர்வார்களா? பாக்யாவின் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS