SOURCE :- INDIAN EXPRESS
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் பெண்கள் என அனைவருமே அசைவ உணவை ஆர்வமாக சாப்பிடும் வழக்கத்தை வைத்துள்ளனர். குறிப்பாக சிக்கன் தொடர்பான உணவுகளில், பல புதிய உணவுகளை தயார் செய்து விற்பனை செய்வதும், இந்த உணவுகள் பலரின் மனத்தை கவரும் வகையிலும் உள்ளது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இந்த சிக்கன் தொடர்பான உணவுகளில், நாட்டுக்கோழிக்கு பதிலாக பிராய்லர் கோழிகள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பிராய்லர் கோழி உடலுக்க நல்லதா இல்லையா என்ற விவாதம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டீன்ஏஜ் பெண்கள், விரைவில், மாதவிடாய் அடைவதற்கு, இந்த பிராய்லர் கோழி வைத்து சமைக்கப்படும் உணவுகள் தான் காரணம் என்ற கருத்தும் பரவலாக இருந்து வருகிறது.
இந்த கருத்துக்கள் உண்மைதானா என்பது குறித்து டாக்டர் இளவரசி தனது யூடியூப் வீடியோவில் பதிவிட்டுள்ளார். இதில், பிராய்லர் கோழி செயற்கை முறையில் வளர்வதால், இது நம் உடலுக்கு கெடுதல், சாப்பிட கூடாது என்று நினைக்கிறோம். சிக்கனின் ஒரு வகைதான் இந்த பிராய்லர் சிக்கன். இந்த வகை சிக்கன்கள் வேகமாக வளரும் தன்மை உடையது. அதன் வகை, வளரும் சூழல், கொடுக்கப்படும் உணவுகள் இவை மூன்றும் தான் இந்த கோழிகள் வேகமாக வளர காரணமாக இருக்கிறது.
பொதுவாக ஒரு கோழி வளர 3 மாதங்கள் ஆகும் என்றால், இந்த பிராய்லர் கோழிகள், 6-8 வாரங்களில் வளர்ந்துவிடும். ஆனால் இது கெட்டது, சாப்பிடவே கூடாது என்பது இல்லை. இந்த கோழிகள் சீக்கிரம் வளர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசி ஏதாவது போடுகிறார்களா என்றால், அப்படி எதுவும் இல்லை. ஹார்மோன் ஊசி விலை அதிகம். இதை போட்டு அவர்கள் கோழியை வளர்க்க வேண்டும் என்றால், கோழிக்கறி வாங்க நாம் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இதனால் ஹார்மோன் ஊசி போடுவது கிடையாது.
கோழிகளுக்கு ஆண்டிபையாடிக் கொடுக்கிறார்களா என்றால், கோழிகள் அனைத்தும் ஒரே இடத்தில் வளர்வதால், ஒரு கோழிக்கு, பாதிப்பு ஏற்பட்டால், அனைத்து கோழிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கோழிகளுக்கு ஆண்டிபையாடிக் கொடுக்கிறார்கள். இந்த ஆண்டிபையாடிக் 24 மணி நேரத்தில் கோழியின் கழிவுகளில் வெளியேறிவிடும். சிக்கனை வாங்கி நாம் சமைத்து சாப்பிடுகிறோம் என்பதால் அந்த ஆண்டிபையாடிக் நம்மை தாக்குவது இல்லை. இந்த கோழியை சாப்பிடுவதால், பெண்கள் குழந்தைகள் சீக்கிரமாக மாதவிடாய் சுழற்சிக்கு வந்துகிறார்களா என்பது இல்லை.
டீன் ஏஜ் வயதில் உள்ள பெண்களுக்கு உடல் பருமன் பிரச்னை நிறையவே உள்ளது. இதுதான் அவர்கள் சீக்கிரமாக வயதிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. பிராய்லர் கோழி சாப்பிடவதால் மட்டும் அவர்கள் விரைவில வயதிற்கு வருவதில்லை. டீன்ஏஜ் வயதில் அவர்கள் உடலுக்கு தேவையான புரோட்டின் சத்து கிடைக்க வேண்டும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், சிக்கன் சாப்பிடுவது, ரொம்ப ரொம்ப அவசியமான ஒன்று என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS