SOURCE :- BBC NEWS

பிலாவல் பூட்டோ, சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான தனது கருத்து குறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்

21 நிமிடங்களுக்கு முன்னர்

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்ட்டியின் தலைவருமான பிலாவல் பூட்டோ, சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான தனது கருத்து குறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவரது கருத்துக்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்திருந்தது.

‘சராசரி பாகிஸ்தானியர்களின் எண்ண ஓட்டத்தை’ மட்டுமேதான் அந்த பேரணியில் பிரதிபலித்ததாக பிலாவல் பூட்டோ குறிப்பிட்டுள்ளார்.

சென்ற வாரம், பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் பேரணி ஒன்று நடைபெற்றது. அந்த பேரணியில், இந்தியாவைக் குறிப்பிட்டு, ‘ஒன்று சிந்து நதியில் இருந்து எங்களுக்கான நீர் பாய வேண்டும் அல்லது அவர்களது ரத்தம் பாயும்,” என்று கூறியிருந்தார் பிலாவல் பூட்டோ.

இதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்தது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மத்திய நீர் மின் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் இந்த விஷயத்துக்குக் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

‘இது போன்ற மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்…” என்று மத்திய அமைச்சர் சி.ஆர் பாட்டீல் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

பிலாவல் பூட்டோ கூறிய கருத்து பற்றிப் பேசும்போது, “முதலில் அவர் தனது மனநிலை சரியாக இருக்கிறதா என்று போய் பரிசோதனை செய்து கொள்ளட்டும். போதும் போதும்… எப்படிப்பட்ட கருத்துகளை அவர் கொடுத்து வருகிறார்,” என்று சொன்னார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானிய குடிமக்களின் விசாக்களை ரத்து செய்வது, 65 வருட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்தது போன்ற பல முடிவுகளை இந்தியா எடுத்தது. பாகிஸ்தானும் பதில் நடவடிக்கைகளில் இறங்கியது.

பிலாவல் பூட்டோவின் சர்ச்சை பேச்சுக்கு இந்தியாவில் எழுந்த கண்டனம்  - தற்போதைய விளக்கம் என்ன?

பட மூலாதாரம், ANI

பிலாவல் பூட்டோ என்ன சொன்னார்?

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மீதான இந்தியாவின் குற்றச்சாட்டுகளை பிலாவல் பூட்டோ மறுத்துள்ளார்.

பாகிஸ்தானை பலியாடாக்கியிருக்கிறார்கள் என்று பாகிஸ்தானில் பிபிசியின் நிருபர் அஷதே மோஷ்ரியிடம் அவர் கூறினார்

“பாகிஸ்தானில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்போவதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல் அல்லாமல்,நாங்கள் எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றிருக்கிறோம். கடந்தகாலத்தில் கூறப்பட்ட இது போன்ற குற்றச்சாட்டுகளினால், பாகிஸ்தான் நிறைய சீர்திருத்தங்களை உள்ளே செய்துள்ளது,” என்று கூறினார் பிலாவல் பூட்டோ.

பிலாவல் பூட்டோ

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock

மேலும் “அதுமட்டுமல்ல, நான் வெளியுறவுத்துறை அமைச்சராக ஆவதற்கு முன்னால், பாகிஸ்தான் FATF ன் க்ரே பட்டியலில் இருந்தது. நான் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அந்தப் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளியே வந்தது. அப்படியென்றால் சர்வதேச சமூகமும், இன்றைய நிலவரப்படி பாகிஸ்தானுக்கு எந்த தீவிரவாதக் குழுக்களுடனும் தொடர்பு இல்லை என்று ஒப்புக் கொள்கிறது என்றுதானே அர்த்தம்,” என்கிறார் அவர்.

ஃபைனான்சியல் ஆக்‌ஷன் டாஸ்க் ஃபோர்ஸ் (FATF) என்பது தீவிரவாதத்துக்கு பண உதவியோ அல்லது பணமோசடியோ செய்யப்படுகிறதா என்று கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு.

ஜூன் 2018ல் இருந்து இந்த பட்டியலில் பாகிஸ்தான் இருந்தது. 2022ல் பாகிஸ்தான் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

பிலாவல் பூட்டோவின் சர்ச்சை பேச்சுக்கு இந்தியாவில் எழுந்த கண்டனம்  - தற்போதைய விளக்கம் என்ன?

பட மூலாதாரம், ANI

லஷ்கர் இ தொய்பா, தாலிபன், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகள் இன்னமும் பாகிஸ்தானில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்டபோது, “வெளியுறவுத்துறையின் அறிக்கையில் உள்ள தகவல்களையும், அது தொடர்பான பிரச்னைகளையும் நான் மறுதலிக்கவில்லை. நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், பாகிஸ்தான் அதன் பாடங்களைக் கற்றுக் கொண்டது. இப்போது அது அந்த அத்தியாயத்தைக் கடந்து சென்று விட்டது,” என்று கூறினார்.

“எந்தத் தூண்டுதலும் இல்லாமல் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டினருகே துப்பாக்கிச் சூடு நடத்துகிறது என்று இந்தியா குற்றம் சுமத்துவது குறித்து கேட்டபோது, “இந்தியாவிடம் இருந்து வரும் துப்பாக்கிச்சூட்டுக்கு பாகிஸ்தான் பதிலளித்துக் கொண்டிருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் இந்தியாதான் இப்போது உணர்ச்சிவசப்படுகிறது. அதோடு இந்தியத் தரப்புதான் பகுத்தறியாமல் நடந்து கொள்கிறார்கள்.”

“ஆனால் இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் மிகப் பொறுமையாக பதிலளித்துள்ளது.”

கருத்துக்கு விளக்கம்

பிலாவல் பூட்டோவின் சர்ச்சை பேச்சுக்கு இந்தியாவில் எழுந்த கண்டனம்  - தற்போதைய விளக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

“நீங்கள் உணர்ச்சிவசப்படவில்லையா? இந்தியாவைக் குறிப்பிட்டுப் பேசும்போது ஒன்று நதியில் தண்ணீர் ஓட வேண்டும் அல்லது ரத்தம் ஓட வேண்டும் என்றீர்கள். பதற்றம் முற்றிய சூழலில் இப்படிப் பேசுவது அமைதியான பேச்சுமுறை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று பிபிசி செய்தியாளர் அஷதே மோஷ்ரி கேட்டார்.

“நான் ஒன்றும் என் கையில் துப்பாக்கியுடன் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருக்கவில்லை. அரசாங்கத்தில் எனக்கு எந்தப் பதவியும் இல்லை. இந்த ஒப்பந்தத்தை இந்தியா மீறிய மறுநாள், ஒரு பேரணியில் நான் பேசிக் கொண்டிருந்தேன்,” என்றார் பிலாவல் பூட்டோ.

“தற்போது அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எடுக்கப்படும் எந்த முடிவும் போருக்கான அழைப்புதான் என்று சொல்லியிருக்கிறது. போர் என்று வந்தால் ரத்தம் சிந்துவதும் நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன்.”

“இந்தியா தண்ணீரை பாகிஸ்தான் மக்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அப்படியென்றால் அது போர் என்றுதான் அர்த்தம்.”என்றார் அவர்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஒரு பேரணியில் பேசிய பிலாவல் பூட்டோ, “தனது பலவீனத்தை மறைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்,” என்றார்.

“சிந்து நதி எங்களுடையது, அது எங்களுடையதாகவே இருக்கும் என்று நான் இந்தியாவுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒன்று அந்த நதியில் தண்ணீர் பாய வேண்டும். அல்லது ரத்தம் பாய வேண்டும். திடீரென்று ஒருநாள், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீங்கள் சொல்ல முடியாது,” என்கிறார் பிலாவல் பூட்டோ.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU