SOURCE :- INDIAN EXPRESS
முருங்கை கீரை என்றாலே அதன் சத்துக்கள் எண்ணில் அடங்காதவை அவ்வளவு சத்துக்கள் முருங்கை கீரையில் அடங்கியுள்ளது. நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உருவாகவும், காயம்படும் காலத்தில் இரத்தம் வேகமாக உறையவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் உதவுகிறது. இப்படியாக முருங்கை கீரையின் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உருவாகவும், காயம்படும் காலத்தில் இரத்தம் வேகமாக உறையவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் உதவுகிறது. இப்படியாக முருங்கை கீரையின் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
நார்ச்சத்து அதிகம் நம் உடலுக்கு தேவையான ஒன்று. கனிமங்கள், புரதங்கள் என அனைத்து விதமான சத்துக்களும் வேண்டும் என்றால் முருங்கை கீரை கட்டாயமான ஒன்றாகும். இரத்த கொதிப்பு அதிகம் உள்ளது என்று தொடர்ந்து மருந்து எடுத்து கொள்பவர்கள் கூட முருங்கை கீரையை தொடர்ச்சியாக எடுத்து கொள்ளலாம். அதிலும் இந்த முருங்கை கீரையை சூப் வைத்து குடிக்கலாம்.
முருங்கை கீரை சூப் வைக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை
உப்பு
பூண்டு
மஞ்சள் தூள்
செய்முறை
முருங்கை இலையை அதன் கிளைக் காம்புகளில் இருந்து ஆய்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு இலை எடுத்துக் கொண்டு, நீர் விட்டு நன்கு கழுவ வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு, உள்ளே முருங்கைக் கீரையைப் போட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த முறையில் தினமும் முருங்கை கீரை சூப் குடித்தால் போதும் பி.பி கூடுனாலும் சரி குறைந்தாலும் சரி இனி கவலை இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக தயிருடன் கீரையை சேர்ப்பதும் இரவில் முருங்கை கீரை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.
வியக்க வைக்கும் சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை | Dr.Sivaraman – Murungai keerai health benefits
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS