SOURCE :- INDIAN EXPRESS

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை, கொளத்துரில் இன்று (ஜன 11) நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், முதன்முறையாக சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து தனது கருத்துகளை பதிவு செய்தார்.

முன்னதாக, பெரியார் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை சீமான் முன்வைத்தார். அதன்படி, “தமிழ் மொழியை குப்பை என்றும், காட்டு மிராண்டி மொழி என்றும் பெரியார் விமர்சித்துள்ளார். தமிழை சனியன் என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார். பெரியாரின் அடிப்படையே தவறானது. திருக்குறள் குறித்து அவதூறான கருத்துகளை பெரியார் பேசி இருக்கிறார். கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர் போன்றோரை எதிரி எனக் கூறியவர் பெரியார்.

பெரியாரை கொள்கை வழிகாட்டியாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்ணிய உரிமை குறித்து தவறாக பேசியவர் பெரியார். குறிப்பாக, தாய், மகள் என உறவுகள் குறித்து அவதூறான கருத்துகளையே பெரியார் பேசியுள்ளார். இதற்கு பெயர் பெண்ணிய உரிமையா? 

Advertisment

Advertisement

தன்னுடைய தோட்டத்தில் இருந்த 1000 தென்னை மரங்களை வெட்டிய பெரியார் பகுத்தறிவாதியா? நானும் ஒரு விவசாயி தான். என்னுடைய தோட்டத்தில் கள் இறக்க அனுமதி இல்லை. இதை செய்வது தான் அறிவார்ந்தவர்களின் பணி. மரத்தை வெட்டுவது அல்ல. சமூக நீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?” என சீமான் பேசியிருந்தார்.

இதற்கு  பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினும் இன்று நடைபெற்ற நிகழ்வில் சீமானுக்கு மறைமுகமாக பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார். அதன்படி, “இன்று யார், யாரோ பெரியார் குறித்து பேசுகின்றனர். பெரியார் பற்றி விமர்சித்தவர்கள் குறித்து பேசி அவர்களை அடையாளப்படுத்த நான் விரும்பவில்லை. 

தன்னுடைய உயிர் பிரியும் கடைசி நொடியில் கூட தமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களுக்காகவும், மனித உரிமைக்காகவும், குறிப்பாக பெண்களின் உரிமைக்காகவும் போராடியவர் பெரியார்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

SOURCE : TAMIL INDIAN EXPRESS