SOURCE :- INDIAN EXPRESS
பொதுவாக பண்டிகை தினம் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகத்தான் இருக்கும். இந்த நாட்களில் வீட்டிற்கு உறவினர்கள் வருவது, நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிப்பது, விடுமுறைக்கு ஊருக்கு செல்வது என இளைஞர்கள் பெண்கள் என பலரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பார்கள். ஆனால் இந்த மகிழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு ஓரிரு நாட்கள் நாம் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருக்கும்.
அதற்கு முக்கிய காரணம் நமது வீடு தான். நாம் வசிக்கும் வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. காலையிலும் மாலையிலும் வீட்டை கூட்டி சுத்தம் செய்து, சாமிக்கு விளக்கேற்றும் வழக்கம் இன்றும் நமது கிராமங்களில் இருந்து வருகிறது. அதேபோல், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிகப்படியான தூய்மையை கடைபிடிப்பார்கள்.
பொதுவாக நாட்களில், வீட்டில் தரையை கூட்டி சுத்தம் செய்தாலும், பண்டிகை நாட்கள் வருவதற்கு முன்னதாக வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பல வேலைகளை தொடங்குவார்கள். பெயிண்ட் அடிக்க முடியாதவர்கள், அல்லது சமீபத்தில் பெயிண்ட் அடித்தவர்கள், வீட்டில் மூலைமுடுக்கில் இருக்கும் ஒட்டடை தூசி ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். மேலே சுத்தம் செய்யும்போது, அந்த தூசி அழுக்கு என அனைத்துமே கீழே வந்து தரையில் படியும்.
குறிப்பாக வீட்டில் ஃபேன் துடைக்கும்போது சொல்லவே வேண்டாம் அதில் இருக்கும் அழுக்கு நேராக தரையை நோக்கி தான் வரும். அப்போ ஜன்னல் வழியாக காற்று வந்தால் அந்த அழுக்கு வீடு முழுவதும் பரவி விடும் நிலை கூட ஏற்படலாம். அதேபோல் நாம் மேல்நோக்கி பார்த்துக்கொண்டே துடைக்கும்போது நமது கண்களில் கூட தூசி விழுந்துவிடும். ஆனால் இந்த முறையில் நீங்கள் ஃபேனை சுத்தம் செய்தால், ஒரு சிறு துரும்பு கூட கீழே விழாது.
வீட்டில் பயன்படுத்த முடியாத அல்லது பழைய நிலையில் இருக்கும் பேண்டை வீட்டில் இருக்கும் ஃபேனின் ரெக்கையில் மாட்டிவிட்டு, துடைக்கலாம். இவ்வாறு செய்யும்போது நமது கண்களிலும் தூசி படாது. அதேபோல் ஃபேனில் இருக்கும் அழுக்கு மற்றும் தூசி தரையிலும் படாது. குறிப்பாக இந்த முறைக்கு லெகின்ஸ் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். இந்த முறையில் உங்கள் வீட்டு ஃபேனை துடைத்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS