SOURCE :- INDIAN EXPRESS

பொள்ளாச்சி அருகே பூட்டிய வீட்டில் சிக்கிக்கொண்ட நபர்களின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு  வீரர்கள், பள்ளி மாணவனை பத்திரமாக பரீட்சை எழுத அனுப்பி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கோவை மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் டபுள் பெட்ரூம் கொண்ட வீட்டில் இன்று காலை இரண்டு பெண்கள் ஒரு மாணவன் உள்ளிட்ட மூன்று நபர்கள் ஏழு முப்பது மணி அளவில் கதவை திறக்க முடியாமல் மாட்டிக் கொண்டனர். இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து கதவை உடைத்து உள்ளே இருந்த மூவரையும்  பத்திரமாக மீட்டனர்.

மேலும், பள்ளி மாணவன் உள்ளே சிக்கிக் கொண்டதால் அவரை பத்திரமாக மீட்டு   சரியான நேரத்திற்கு தேர்வு எழுத அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயனைப்பு துறையினர்க்கு பொள்ளாச்சி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தற்போது பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS