SOURCE :- BBC NEWS

போப் பிரான்சிஸ் வாடிகனுக்கு அழைத்து வந்த சிரியா அகதி எப்படி இருக்கிறார்?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
போப் பிரான்சிஸ், 2016இல் லெஸ்போஸின் கிரீக் தீவில் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தபோது அவர்களில் 12 பேரை இத்தாலிக்கு தன்னுடன் வருமாறு கூறி உலகுக்கு ஆச்சர்யமூட்டினார்.
சிரியா உள்நாட்டுப் போரால் குடும்பத்துடன் அகதியான வாஃபாவும் அவர்களில் ஒருவர்.
அதுகுறித்து வாஃபா பேசும்போது, “விமானத்தில் அவர் எழுந்து நேராக வந்து எங்களை வரவேற்றார். அதுமட்டுமின்றி, அவர் என் குழந்தைகளின் தலையிலும் கை வைத்தார்.
இத்தாலி சென்றது தன் குடும்பத்தின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக வாஃபா கூறுகிறார். ”எனக்கும் என் குழந்தைகளுக்கும் வாழ்வில் பல மாற்றங்களை அது கொண்டு வந்தது. அவர் ஒரு நல்ல மனிதர், ஒரு தேவதூதர்,” என்று தெரிவித்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU