SOURCE :- INDIAN EXPRESS

“எம்.எல்.ஏ மன்சூர் முகமது திமிரைப் பாருங்கள். போலீஸின் நிலைமையே இப்படி இருக்கும் போது, பொதுமக்களின் கதி என்னவாகும். இந்த வீடியோவை இந்தியா முழுவதும் காணும் வகையில் பகிரவும்.” என்று ஒரு நபர் காவலரை சரமாரியாக தாக்கும் வீடியோவை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து  வருகிறார்கள். 

Advertisment

இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ்மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

உண்மை சரிபார்ப்பு 

Advertisment

Advertisement

உண்மைத் தன்மையைக் கண்டறிய வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி இந்துஸ்தான் டைம்ஸ் (Hindustan Times) இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, “உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் உள்ள கன்கர் கெரா என்ற பகுதியில் இயங்கி வரும் பா.ஜ.க கவுன்சிலருக்கு சொந்தமான உணவகத்தில் நடைபெற்ற சம்பவம்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “காவல்துறை துணை ஆய்வாளர் சுக்பால் சிங் மற்றும் பெண் ஒருவரை அந்த உணவகத்தின் உரிமையாளரான பா.ஜ.க கவுன்சிலர் மனிஷ் பன்வார் மற்றும் உணவக பணியாட்கள் இணைத்து தாக்கியுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக அப்பெண் மற்றும் துணை காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் கன்கர் கெரா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், டைம்ஸ் ஆப் இந்தியா 2018 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தியின்படி, “இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பா.ஜ.க. கவுன்சிலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது என்றும், துணை காவல் ஆய்வாளர் சுக்பால் சிங் மற்றும் அவருடன் சம்பவத்தன்று இருந்த பெண் வழக்கறிஞர் தீப்தி சவுத்ரி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. 

இறுதியாக, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கவுன்சிலர் மனிஷ் பன்வார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி 2021 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. இறுதியில், தேடலின் எம்.எல்.ஏ மன்சூர் முகமது காவலரை தாக்குவதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் உண்மை இல்லை என்றும், அதில் இருப்பவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க கவுன்சிலரான மனிஷ் பன்வார் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://newsmeter.in/fact-check-tamil/manoor-ahamed-mla-attacking-a-policeman-742276

SOURCE : TAMIL INDIAN EXPRESS