SOURCE :- BBC NEWS

மகாராஷ்டிரா

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

”புஷ்பக் எக்ஸ்பிரஸில் வந்த பயணிகள் மீது கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் உயிரிழந்தனர்” என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

“பச்சோரா நிலையத்தில், யாரோ ஒருவர் ரயிலில் ஏற்பட்ட தீ காரணமாக சங்கிலியை இழுத்தார், இதனால் ரயில் நின்றது. இந்த சம்பவம் மாலை 5 மணிக்கு நடந்தது.” என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

“சில பயணிகள் தீக்கு பயந்து ரயிலில் இருந்து இறங்கினர், ஆனால் மறுபுறம் வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது”

”லக்னோவிலிருந்து மும்பைக்குச் செல்லும் புஷ்கர் எக்ஸ்பிரஸ் ரயிலின் B4 பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டது. பயணிகள் தீ விபத்து ஏற்பட்டதாக நினைத்தனர்.” என பூசாவல் பிரிவு ரயில்வே செய்தி தொடர்பாளர் பிபிசி மராத்தியிடம் கூறினார்.

”இதன் காரணமாக பல பயணிகள் ரயிலில் இருந்து இறங்கினர். அதே நேரத்தில் கர்நாடக எக்ஸ்பிரஸ் மறுபுறம் வந்து கொண்டிருந்தது, பல பயணிகள் மீது அந்த ரயில் மோதியது. ”

”இந்த சம்பவத்தில் ஏழு முதல் பத்து பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது” என்று அவர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU